திங்கள், 23 ஜூலை, 2012

:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8

பகுதி 8:-

நாம் அடுத்ததாக பார்க்கப்போவது யாரைப்பற்றி தெரியுமா?...

அடுத்ததாக நான்இருவரைப்பற்றி எழுதபோகிறேன்.அதில் ஒருவர் சினிமாத்துறைக்கு சம்பந்தமில்லாத நபர் வெளிநாட்டில் கலைநிகழ்ச்சிக்கு நடிகர்,நடிகைகள் எல்லாரும் போகும்போது,சினிமாத்துறைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு நபர் சென்று வருவார்.மற்றொருவர்…விவரம் கீழே…என்னங்க இது நடிகர்களின் நிஜ முகங்கள்ன்னு பேர் வச்சிட்டு வேற யாரையோப்பற்றி எழுதப்போறீங்க என்று கேட்பது புரிகிறது...

ஆனா இது போன்ற நபர்களை நீங்களும் தெரிஞ்சிக்கனுமே அதுக்குதான்.

நான் குறிப்பிடும் இவர் ஒரு பல முகங்களை கொண்டவர்.இவர் பேர் இனிஷியலே ரொம்ப குளிர்ச்சியாகத்தான் இருக்கும்.பகுதி நேர அரசியல்வாதி.அதாங்கதேர்தல் வரும்போது கட்சி கூட்டம் நடத்துவார்.அடுத்த கூட்டம் அடுத்த தேர்தலுக்குதான்.சொந்தமா ஹோட்டல்,அப்புறம் மெடிக்கல் காலேஜ் எல்லாம் இருக்கு..கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி இவங்க காலேஜ கூட அம்மா ஆட்சியில இடிச்சிட்டாங்க..இப்போ யாருன்னு தெரிஞ்சிருக்கும்...

அப்போது அவர்களுக்கு நார்த் ஃபோக் சாலையில் ஒரு அலுவலகம் இருந்தது.அங்குதான் அவரை சந்திக்க சென்றேன்.அப்போது அவ‌ரிடம் உங்களுக்கு எப்படி சார் சினிமா உலகத்துடன் தொடர்பு என்றேன்? அவர் சிரித்துக்கொண்டே.நமக்கு ரொம்ப நாளாக இவங்களோட தொடர்பிருக்கு,ஃபாரின் போகும்போதெல்லாம் நம்மள கூப்பிட்டு விடுவாங்க என்ற அவர் பதில் எனக்கு திருப்தியளிக்காத்தால் யார் சார் கூப்பிட்டு விடுவாங்க என நான் கேள்வியாக கேட்க...அவர் என் கேள்விக்கு சாமார்த்தியமாக சிரிப்பையே பதிலாக தந்தார்.ஆனால் என்ன "கலைச்சேவை" செய்ய போகிறார் என்று சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும்..

அடுத்து நான் சந்தித்தது இன்று மிகப்பெரும் அரசியல் தலைவராக இருக்கிற மாலுமி நடிகர்.நான் அவரை முத‌லில் சந்தித்தது நடிகர் சங்கத்தில்தான்.அப்போது உடல் எடை கம்மியாக நன்றாக இருந்தார் கட்சி ஆரம்பிப்பதைப்பற்றி ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன.அவரைச்சுற்றி எப்போது நான்கைந்து பேர் என கம்பீரமாக ஆனால் எளிமையாக இருந்தார்.உட்காருங்க சார் என்றார்.ஒரு பொறுப்பான தலைவருக்குரிய அனைத்து தகுதிகளுமே அவரிடமிருந்ததை என்னால் உணர முடிந்தது.நிறைய நேரம் பேசினோம்.

அவருடைய நண்பருடன் அவர் சேர்ந்து நடத்திய ஃபிலிம் புரொடக்சன் அலுவலகம் 100 அடி சாலையில் இயங்கி வந்தது.அப்போது அது உதவி இயக்குனர்களின் கூடாரம் என்றே சொல்லலாம்.நிறைய பேருக்கு உதவி செய்வதை நான் கண்ணால் கண்டிருக்கிறேன்.அது மட்டுமல்லாது,நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து,அதன் மதிப்பையும் உயரச்செய்தவர்.அவ‌ருக்கு அப்போது மது பழக்கம் இருந்தது ஆனால் அவர் அதற்கு அடிமையில்லை. ஆனால் இன்று அவருக்கு இருக்கும் மது பழக்கம் எப்படி அவரை ஆட்கொண்டது என எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.

பழகிய நாட்களில் நன்றாகவே பழகினார்.மேலும் அனைவரிடமும் மரியாதையாகவே நடந்து கொண்டார்.என்னுடைய பிசினஸ் பற்றி பேச,நான் தான் ஏற்பாடு பண்றேன் அதனால எங்க ஆளுங்க பார்த்துப்பாங்க என்றார்.நிகழ்ச்சியில் யார் யாரை கலந்துகொள்ள அனுமதிப்பது என்ற முடிவை எடுக்க அவ்ருக்கே அதிகாரம் வழ்ங்கப்பட்டிருந்தது.அவ்வாறு கலந்து கொள்பவர்களுக்கு அவர்களின் மார்க்கெட்டுக்கு தகுந்த மாதிரி சகுமானம் இந்திய ரூபாயில் சங்கத்திலேயே வைத்து கொடுக்கப்பட்டது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதில் மிக அக்கறையாக ,வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் நடிகர்களை அதிகம் தேர்ந்தெடுத்தார்.அவரின் அந்த குணம் என்னை இன்று வரை என்னால் மறக்க இயலவில்லை.என்ன காரணத்தினாலோ அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அது மட்டுமில்லை என்றால் அவருக்கு தலைமை தாங்கும் தகுதி இருப்பதை யாரும் மறுக்க இயலாது...

தொடரும்... 




வியாழன், 5 ஜூலை, 2012

::: நடிகர்களின் நிஜமுகங்கள் ::: PART 7



பகுதி 7:‍ -

வேலைப்பளுவின் காரணமாக சற்றே இடைவெளி...


"கோபால்" அக்காவிடம் அதாங்க அந்த மயிலாட மேடத்திடம் அவர் தோழிகள் எவ்வளவு எடுத்து செல்கிறார்கள் என்பதை ஒன்று விடாமல் கூற நான் அவனைப்பார்த்து முறைத்தேன்.அதை கண்டுகொள்ளாத அவன் காரியத்தில் கண்ணாயிருந்தான்.பயிற்சி முடிந்து அனைவரும் வெளியேற எங்களிடம் மனம் விட்டு பேசினார் அவர்.ஏழ்மையான குடும்பத்தில் ஏழு பெண்களில் ஒருவராக பிறந்து சினேகமான நடிகையின் தம்பியை மணந்து,பிறகு மணமுறிவு ஏற்பட்டு,தற்போது இரண்டாவது கணவருடன் வசித்து வருகிறார் மிக சிறிய வயதில் இண்டஸ்ட்ரியில் நுழைந்த அவர்,ஒரு பிரபலமான நடனக்கலைஞரிடம் உத‌வியாளராக சேர்ந்தார்.அந்த மேடம் இண்டஸ்ட்ரியில் சிறு வயதில் நுழையும்போது தான் பட்ட கஷ்டத்தையெல்லாம் விலாவாரியாக கூறினார்...

நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.கோபாலிடம் தான் வெளிநாடு சென்று வந்தவுடன் அழைப்பதாக கூறினார்.அதைப்போலவெ திரும்பி வரும்போது அவனுக்கு ஒரு சென்ட் வாங்கி வந்து அன்பளிப்பாக கொடுத்தார்.ஆனால் சும்மா சொல்லக்ககூடாது அந்த‌ அளவுக்கு அவன் நட்பு வளர்த்திருந்தான்..

அடுத்து நான் பார்க்க சென்றது...அடுக்கு மொழியில் வசனம் பேசும் அந்த இயக்குனர் கம் நடிகரின் மகனை...யாரென்று தெரிகிறதா?அந்த நம்பர் நடிகையின் முதல்!? காதலர்.(நம்பர் கூடிக்கொண்டே போவதால் சீனியாரிட்டி பிரகாரம் சொன்னேங்க).தி.நகரில் உள்ள அவரது இல்லத்தின் வர‌ந்தாவில் அவரது தந்தையின் வெள்ளிவிழா படங்களின் ஷீல்டுகள் ஆக்கிரமித்து இருந்தது.அந்த நடிகரின் தாயார்தான் குடும்பம்,அலுவலகம் என அனைத்தையும் கவனித்துக்கொள்கிறார்.அவரின் பள்ளி தோழிதான் அவருக்கு உதவியாளர்.என்னிடம் ஃபோனில் பேசியது நடிகரின் தாயார்தான்.என்னுடைய சொந்த ஊருக்கு அருகில்தான் நடிகரின் தந்தையாரின் ஊர் என்பதால்,அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் என்னில் மிகுந்திருந்தது.

சிறிது நேரத்தில் சூடான ஃபில்டர் காஃபி வந்தது.அந்த அலுவலக உதவியாளரிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது அந்த நடிகர் வந்தார்.1984ம் ஆண்டு பிறந்த அவருக்கு வயது,அனுபவம் எல்லாம் குறைவு.ஆனால் சினிமாவில் மிகுந்த ஆர்வம்.அவரது தந்தை குறைந்த வயதிலேயே அவருக்கு நிறைய விடயங்களை பயிற்றுவித்திருந்தார்.கார் ஓட்டுவதிலும் ஆர்வம் அதிகம் உள்ள அந்த நடிகர்,அப்போது இரண்டு கார்களை வைத்திருந்தார்.ஆனால் வீட்டில் மிகுந்த கட்டுப்பாடு.சில விடயங்கள் எனக்கு ஆச்ச‌ர்யத்தை த‌ந்தது.

அவரது வீட்டில் நிறைய வேலயாட்கள்,உத‌வியாளர்கள் என எப்போதுமே கூட்டம். அந்த சம‌யத்தில் ஒன்றிரண்டு படமே நடித்திருந்தார்.வெளியில் கிளம்பிக்கொண்டிருந்த அவரை அவரது அம்மாவின் பள்ளி தோழியான அந்த அலுவலக உதவியாளர் அறிமுகப்படுத்தி வைத்தார்.அவருடனான எனது வேலைகளை முடித்துக்கொண்ட நான்,அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.அப்போது வெளியில் செல்லும் அவ‌ருக்கு,ஐந்தாறு நூறு ரூபாய்கள் கொடுக்கப்பட்டது..அதை வாங்கிகொண்ட அவர்,என்னிடம் இந்த பாருங்க சார் இதே மாதிரி பன்றாங்க,சின்ன பிள்ளைக்கு பணம் கொடுப்பது போல கொடுக்கிறாங்க.இத வச்சிகிட்டு என்ன பண்றது.எனக்கு ஒரு கிரிடிட் கார்டு வாங்கி கொடுங்க என்று சொன்னார்.அப்படியே எனது நட்பை தக்க வைத்துக்கொண்டேன்..

பொதுவாக சினிமாத்துறையினர் சென்டிமென்டுக்கு பெயர் போனவர்கள். இவர்களும் அப்படித்தான்.நான் ஃபாரக்ஸ் கொடுத்த வருடம் நடிகருக்கு நிறைய படங்கள் புக் ஆகி சூட்டிங்கிற்காக வெளிநாடு தொடர்ந்து செல்ல அவரது தாயாருக்கு மிக்க மகிழ்ச்சி.அதனால் நான் அந்த நிறுவன‌த்தில் வேலை செய்கின்ற வரையில் என்னை மட்டுமே வரச்சொலுவார் அவரது தாயார்.

நான் பார்த்த வரையில் அந்த நடிகர் மீடியாக்கள் சொல்வது போல பெரிய ஃபிளே பாய் எல்லாம் கிடையாது.எல்லாரையும் போல் இளம் வயதிற்கான‌ ஈர்ப்பு அவருக்கும் இருந்திருக்கலாம்.காதல் திருமணம் செய்துகொண்ட இவரது பெற்றோர்,நம்பர் நடிகையுடன் இவருக்கு இருந்த காதலை ஒரளவு ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.ஆனால் காதலர் இருவரிடமும் பிரச்சனை வரக்காரணமான‌வர் உச்சத்தில் இருந்த‌ இருக்கின்ற அந்த சூப்பர் நடிகர்.

அதற்கு காரணம் அவ‌ரின் மகள்.அவருக்கு மன உளச்சலை அதிகம் ஏற்படுத்திய,ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அவர் மகளிடம் முதலில் மாட்டியதுஇந்த நடிகர்தான் ஆனால் இவர் தப்பித்துவிட,மாட்டிக்கொண்டது ஒல்லிபிச்சான் நடிகர்.ஆனால் தன் தவறை மறைக்க தன் அப்பாவிடம்,இவரைப்பற்றி ஏடாகூடமாக போட்டுக்கொடுக்க அவர்,தன்னோடு அப்போது நடித்த அந்த நம்பர் நடிகையிடம்,இந்த நடிகரைப்ப‌ற்றி சொல்ல .பெரிய நடிகரே இப்படி சொல்கிறாரே என அவ்ர் நம்பி இவரோடு சண்டை போட முறிந்தது இவர்கள் காதல்..

தொடரும்...



வெள்ளி, 22 ஜூன், 2012

::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 6


பகுதி 6:‍-

கண்டிப்பாக நீங்கள் யாரென்று யூகித்திருப்பீர்கள். அந்த நேரத்தில் சினிமாவில் நல்ல உச்சத்தில் இருந்தார்.அப்போது ஷெனாய் நகரில் வசித்து வந்த அவருக்கு அப்பொழுதுதான் திருமணம் ஆகியிருந்தது. ஃபோனில் அழைத்த ஒரு நண்பனிடம் பேசுவதை போன்று பேசிய‌ அவர்,தன்னுடய தேவைகளை கூறினார்.மறுநாள் காலை வரச்சொன்னார்.

பொதுவாக இந்த அளவுக்கு உச்சத்தில் உள்ள நடிகர்களுடன் நேரடியாக பேசுவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.ஆனால் அதற்கு நேர்மாறாக இருந்தார் அவர்.ஆனால் ஏனோ வெள்ளித்திரையில் மிளிர அவர் இன்று வரை போராடிக்கொண்டே இருக்கிறார்.

காலை சுமார் ஒன்பது மணியளவில் அவர் ஃபிளாட்டிற்கு சென்றேன்.என்னை வரவேற்ற அவரின் மனைவி,அவரது வீட்டின் வரவேற்பறையில் அமரச்செய்தார்.அவர் குளித்துக்கொண்டு இருக்கிறார் 10 நிமிடம் வெய்ட் பண்ணுங்க என்றார்.சரியென்று அன்றைய தினசரியை புரட்டிகொண்டிருந்தேன்,திடீரென்று யாரோ என் பெயரைச்சொல்லி அழைக்க,நான் சுற்றி பார்த்தேன். அப்போது அழைத்தது அந்த நடிகர் தான்.அவரின் வீட்டில் ஹாலோடு சேர்ந்து அமைந்திருந்த அந்த பாத்ரூமிலிருந்து தலையை வெளியே நீட்டி சாரி பாலாஜி கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன் என்றார்.சொன்ன படி சிறிது நேரத்தில் வந்த அவர்,தனது மனைவியை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.இஸ்லாம் மதத்தை சேர்ந்தவரான‌ அவர் அதே மதத்தை பின்பற்றும் தனது நண்பியை காதலித்து மணம்புரிந்தவர்.

அவரிடம் பேசிக்கொண்டே,எனது வேலைகளை முடித்தேன்.உடனே என்னை காலை உணவு சாப்பிட அழைத்தார் நான் வேண்டாம் என்று மறுக்க பின் மனைவியிடம் ஜூஸ் கொண்டு வா என்று சொல்லிவிட்டு என்னிடம் தன்னுடைய அனுபவங்களை பகிரிந்து கொண்டே சாப்பிட்டார்.நானோ அவரை முதல் முதலாக அப்பொழுதுதான் சந்தித்தேன்,ஆனால் அவரின் பேச்சும்,நடந்து கொண்ட விதமும் என்னை மிகவும் நெகிழச்செய்தது.

தேங்ஸ் என்று சொல்லிவிட்டு,அங்கிருந்து கிளம்பிய நான் அடுத்து பார்க்க போனது மானையும் மயிலையும் ஆட்டி வைக்கிற அந்த மேடத்தை...

சௌத் ஃபோக் சாலையில் உள்ள அந்த நடன பயிற்சி கூடத்திற்கு எங்களை வரச்சொல்லியிருந்தார் அவர். அப்பொழுது மிகப்பிரபலமான காதல் ஜோடி அங்கு அமர்ந்திருந்தது.அது மார்க்கண்டேய நடிகரின் மகன் ஆவார்.அவர்கள் இருவரும் ஒரு ப்டத்தின் பாடல் பயிற்சிக்காக அங்கு வந்திருந்தனர்.20 வயது முதல் 30 வயது வரையுள்ள சுமார் அறுபது முதல் எழுபது பேர் அங்கு பல வித பயிற்சியில் இருந்தனர்.அந்த காதல் ஜோடி,தங்கள் பயிற்சியை விட காதல் குறும்புகளில் தான்அதிகம் நாட்டம் செலுத்தினர்.அவரிடமும் போய் பிசினஸ்பேசினோம்,அவரோ எல்லாவற்றையும் எங்கள் தயாரிப்பாளர் பார்த்துக்கொள்வார் என்று சொன்னார்.

சிறிது நேரத்தில் "அக்கா வர்றாங்க!!" "அக்கா வர்றாங்க!!" என்ற முணுமுனுப்பு கேட்டது.சிறிது நேரத்தில் அந்த மேடம் வந்தார்.அனைவரும் ஒவ்வொருவராக அவ‌ரது காலைத்தொட்டு வணங்கினர் அந்த காதல் "ஜோ"டி உட்பட.."குரு மரியாதையாம் அப்படி வணங்குவது.அவரது உதவியாளர் நாங்கள் வந்திருக்கும் விடயத்தை அவரிடம் கூற,அவர் எங்களைப் பார்த்து அருகில் வந்து அமருங்கள் என்றார்.

நாங்கள் விவரங்களைக்கூற,பொறுமையாக கேட்டுகொண்ட அவர்,நாங்கள் சுமார் 100 பேர் போறோம்.அதுல, 50 பேர் கிட்ட புதுசா வெளிநாடு டிராவல் பன்றாங்க அதனால,தயவுசெய்து நல்ல முறையில முடிச்சு கொடுங்க என்றார்.உடனே எல்லாரையும் அழைத்த அவர், "அப்பா எல்லாம் நல்லா கேட்டுக்கோங்க..இவ‌ங்க தான் நம்ம அஃபிசியல் ஏஜென்ட்ஸ்,எல்லாரும் இவங்ககிட்ட விவரம் கேட்டுக்கோங்க என்றார்.

நான் குறிப்பிட்ட அந்த மேடம் யாரென்று தெரிந்திருக்கும் உங்களுக்கு.அவர் நிறத்தில் சற்று கருப்பு என் கூட வந்திருந்த கோபாலும் கருப்பு,அவன் அவரை அக்கா என்று அழைக்க அவ‌ருக்கு உச்சி குளிர்ந்தது.அவர் என்னிடம் பேசுவதை விட அவனிடம் பேசுவதையே அவர் விரும்பினார். அவனும் கிளம்புகிற வரையில் அந்த "அக்கா" வை விட வில்லை.(நடுவில் என் காதில் கோபால்"சார் நாங்க ரெண்டு பேரும் ஒரே கலர்" அதான் அக்கா என்னிடம் நல்லா பேசுராங்க என விளக்கம் வேறு கொடுத்தான்.)சிறிது நேரம் கழித்து வெளிநாடு சம்பந்தமான சில விவரங்களை கேட்ட அவர், அவரின் தோழி நடிகைகள் எவ்வளவு வெளிநாட்டு பணம் எடுத்து செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார்.

தொடரும்...

சனி, 16 ஜூன், 2012

சோற்றிற்கு திண்டாட போகும் தமிழகம்!!!

இதைப்படிக்கும் நீங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால்,இந்த பிரச்சனையின் வீரியத்தை நன்றாக உணருவீர்கள்.

தஞ்சையிலிருந்து திருவாரூர்,நாகப்பட்டிணம்,கும்பகோணம்,மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ‍ மயிலாடுதுறை,திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் நீங்கள் பேருந்தில் பயணம் செய்தால் சாலையின் இருபுறமும் பச்சை பசேல் என காட்சியளிக்கும்..அதுவும் குறிப்பாக ஆகஸ்ட் முதல் மழைக்காலம் வரையில்..இயற்கையின் அழகை நீங்கள் கண்டு ரசிக்கலாம்..நான் மேலே குறிப்பிட்டதெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வரை...

ஆனால் இப்போதோ நிலமை தலைகீழ்...சாலையின் இருபுறங்களிலும்.."ஹைவே சிட்டி","கோல்டன் சிட்டி",டீரீம் சிட்டி என நிறைய சிட்டிக்களைத்தான் பார்க்க முடியும்..பச்சைபசேல் என்று இருந்த நெல்வயல்கள் இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காய்ந்து கிடக்கின்றன.மனிதன் பசிக்காக ஆதிகாலத்தில் விவசாயத்தைக் கண்டுபிடித்தான்.ஆனால் இப்போது அதனை பணத்திற்காக அழித்து வருகிறான்.

கிராமங்களில் சில ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் விவசாயத்தின் வருமானம் போதாமலும்,பணத்திற்காகவும் கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட்  உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் அரசின் "உலகமயமாக்கம்" என்ற பொருளாதார கொள்கையால் அனைத்து மாநில விவசாயிகளும் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இந்த உலகமயமாக்கம்,தாராளமயமாக்கம் என்ற பெயரில் உலகத்தில் உள்ள பெரிய பணக்கார முதலைகளிடம் நம்மை அடகு வைப்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.இதில் அனைத்து தொழில்களும் பாதிக்க பட்டுள்ளன்.அதிகம் பாதித்திருப்பது விவசாயியும்,விவசாயமும்.கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் விவசாயத்தை விட்டு விலகியிருக்கிறது.


புதிதுபுதிதாக தொடங்கப்பட்ட மனை விற்பனை நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டு கொண்டு நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்து,விவசாய நிலத்தை கூறுபோட்டு விற்பனை செய்து கொண்டிருக்கிறது.நல்ல காற்றாட்டம், தண்ணர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில்தான் மக்கள் வீடுகட்ட‌ விரும்புவர்.இதை பயன்படுத்திதான் ரியல் எஸ்டேட்உரிமையாளர்கள் வயல்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதில் மண் நிரப்பி பிளாட்டுகளாக பிரித்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.பிற நிலங்கைள விட வயல்களை பிளாட் ஆக்குவதால் 100 மடங்கு வைர லாபம் கிடைக்கிறது.விவசாயத்தில் பல சிரமங்கள் உள்ளதால் விவசாயிகளும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விலைக்கு கொடுத்து விடுகின்றனர்.


தமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தின் நெல் தேவையை 75 சதவிகிதம் பூர்த்தி செய்யும் அளவுக்கு வயல்கள் இருந்தன. ஆனால் இன்று 25 சதவகித தேவைய கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில், வெளிமாநிலங்கைள எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைக்கு பெரும்பாலான மாவட்டங்கள் தள்ளப்பட்டு விட்டன. இப்படி வயல் வெளிகள் வீட்டு மைனகளாக மாறுவதற்கு அரசியல்வாதிகளும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர்.

சிறிய மாநிலமான கேரளாவிலும் வயல்வெளிகளில் வீடுக‌ள் முளைக்க தொடங்கி இதே பிரச்சனை தலை தூக்கிய போது உடனெ விழித்தெழுந்த அப்போதய அச்சுதானந்தன் அரசு 2008ம் ஆண்டு "தண்ணீர் தடை பாதுகாப்பு சட்டம்" என்ற சட்டத்தை இய‌ற்றியது.இந்த சட்டம் மூலம்தண்ணீர் பாய்ந்து செல்லும் எந்த பூமியிலும், எந்த வயலிலும் வீடு கட்ட முடியாது.அதற்கு உள்ளாட்சியின் அனுமதி கிடைக்காது. இந்த சட்டத்தில் சில விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.அதாவது ஒருவருக்கு ஐந்து சென்ட் வயல் மட்டும் இருந்து, ஆனால் அவருக்கு வீடு இல்லையெனில், அப்படிப்பட்டவர் அந்த வயலில் வீடு கட்டலாம். அவ்வாறு கட்ட வேண்டுமெனில் அந்த வயலுக்கு உட்பட்ட தாலுகாவில் எங்கும் அவருக்கோ, அவரது மனைவிக்கோ, மகன், மகளுக்கோ வீடு இருக்க கூடாது. 

அவ்வாறு வீடு இல்லாமல்இருப்பதை அந்த பகுதி ஆர்.டி.ஓ. தைலைமயிலான கமிட்டி உறுதி செய்ய வேண்டும்.இந்த கமிட்டியில் உள்ளாட்சி மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் இந்த கமிட்டி கூடி எவருக்கும் வயல் வெளியில் வீடு கட்ட இதுவைர அனுமதி வழங்கியதில்லை.இந்த கமிட்டி வயல்வெளிகளில் வீடு கட்ட அனுமதி வழங்க கூடாது என்று கூறிவிவசாயிகள் சார்பில் கேரள ஐேகார்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதால்,வயல்வெளிகளில் வீடு என்பது கேரளாவில் நடக்காத காரியமாக மாறிவிட்டது.வயலை ஒட்டி உள்ள பகுதிகளில் பல நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தென்னை போன்ற மரங்கள் நட்டு வைத்திருப்பர். இதை "கைரபூமி" என்று அழைப்பது உண்டு.இங்கு வீடு கட்ட இந்த சட்டத்தில் வழிவைக செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கைரபூமி கிராம ரிக்கார்டுகளில் வயல் என்று குறிப்பிட்டிருந்தால் அங்கும் வீடு கட்ட அனுமதி கிடைக்காது.இந்த சட்டம் காரணமாக கேரளாவில் ரியல் எஸ்டேட் வியாபாரம் வயல் வெளிகளுக்கு செல்லதாதால் அங்கு விவசாயம் காப்பாற்ப்பட்டுள்ளது. வீடுகள் மலைப்பிரேதசங்களிலும், காலி மனைககளில் மட்டுமே கட்டப்படுகிறது.


ஒரு நாட்டிற்கு இன்றியமையாதது அந்நாட்டின் உணவு உற்பத்தியே. அத்தகைய உணவு உற்பத்தியை இயற்கையாக பெற்றுள்ள நாடு நமது நாடு. அத்தகைய விவசாயத்தை பேணிக்காப்பது நமது கடமை. உணவு உற்பத்தி இல்லாமல் வேறு எந்த வளர்ச்சி இருந்தும் எந்த பயனும் இல்லை என்பது உண்மை.இதை தடுக்கஉடனடியாக கேரளாவைப்
போன்று தமிழ்நாட்டிலும் மிக கடுமையான‌ சட்டம் கொண்டு வர வேண்டும்.விவசாய நிலங்கள் எப்பொழுதும் விவசாய நிலங்களாக இருக்க வேண்டும்.விவசாய காரணங்களைத் தவிர, வேறு காரணங்களுக்காக விவசாய நிலத்தை விற்பனை செய்தால், அதை சார்பதிவாளர் தடுத்து நிறுத்த வேண்டும்.

விவசாயத்துக்கு தேவையான இடுபொருள், உரம், தண்ணீர், மின்சாரம் மிக  குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். விவசாயத் தொழிலை லாபகரமான தொழிலாக்குவதற்கு எந்த வகையில் எந்தெந்த பயிர்களை எப்படி சாகுபடி செய்ததால் உரிய லாபம் கிடைக்கும் என்பதை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏழை விவசாயிகளுக்கு எளிய வகையில் கடன் கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும். விவசாயத்துக்காக பெறப்படும் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும். விவசாயம் பாதுகாப்பு அரசின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொருவரின் கடமையுமாகும். உணவு என்பது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, நாளைய தலைமுறைக்கும் தேவை.கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.


இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.

இல்லையெனில் தமிழகம் உணவு தானியத்திற்கு கையேந்தும் நிலை வந்துவிடும்..



புதன், 13 ஜூன், 2012

::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 5

பகுதி 5:‍-



மாடிக்கு எல்லோரையும் அழைத்துப்போன அந்த நடிகர்,தள்ளாட்டத்துடனே வெளியே வந்தார். இதற்கிடையில் நான் பார்க்கும் நடிகர் எல்லாரிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

இந்த கூட்டத்தில் இருந்து எஸ்கேப் ஆகி வெளியே வந்த புரட்சி நடிகரிடம் பேச ,அவர் தப்பா எடுத்துக்காதீங்க,இந்த விடயமெல்லாம் நம் மனைவிதான் கவனிச்சிக்கிறாங்க,ஆஃபீஸ் நம்பருக்கு ஃபோன் செய்து பாருங்க என்றவர், நாங்கள் ரெகுலரா 10 வருடமா ஒரே இடத்தில் வாங்கி வர்றோம் அதனால தேவைப்படாதுன்னு நினைக்கிறேன் என்றார்.இதற்கு நடுவில் எனக்கு உதவிய அந்த பி.ஆர்.ஒ மற்ற பி.ஆர்.ஒ க்களிடம் எனது நம்பரை, அனைவரிடமும் கொடுக்க சொல்லி இன்ஸ்டரக்ஷன் கொடுத்தார்.


அந்த நேரத்தில் "பாத்ரூமில் குளித்து பேமஸ் ஆன அந்த நடிகையின் மேனேஜர் கூப்பிடச்சொன்னதாக" அலுவலகத்தில் இருந்து ஃபோன் வந்தது.அப்போது அவர் நல்ல பிசி நடிகை."பாத்ரூம் சமாச்சாரம் எல்லாம் சமீபத்தில் நடந்ததுதான்.அப்போது அவர் கீழ்பாக்கம் அருகில் ஒரு ஃபிளாட்டில் வசித்து வந்தார்.அவர் மேனேஜருக்கு ஃபோன் செய்தவுடன்,அவர் மேடம் உங்களை உடனேவரச்சொல்றார் ஏன்னா ,அவர் நாளைக்கு காலையில கும்பகோணத்திற்க்கு சூட்டிங் போறார். அத‌னால நேரம் இல்ல இப்பவே டாகுமெண்டேஷனை முடிச்சிக்கலாம் என்றார்.


நான் அவரிடம்,நாளை எப்போது கிளம்புகிறார்கள் என்றேன்.9 மணிக்கு என்றார்.இப்போ சங்கத்தில இருக்கேன் நாளைக்கு காலையில 8 மணிக்கு வந்து கொடுக்கட்டுமா என்று கேட்டேன்.அவர் மேடத்திடம் கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்றேன் என்றார். ஒரு வழியாக டைம் ஓ.கே ஆக,இதை அலுவலகத்தில் சொன்னேன். எனது டீமில் உள்ளவர்களுக்கு தாங்களும் ஒன்றிர‌ன்டு பேரையாவது சந்திக்க வேண்டும் எனவே நான் நீ என சண்டை, ஒரு வழியாக சமாளித்து மீன் நடிகையிடம் டாகுமெண்ட் கலெக்ட் பண்ண இவர், இடுப்பழகியிடம் செக் கலெக்ட் செய்ய இன்னொருவர் என ஆளொக்கொரு வேலை வழங்கப்பட்டது.


பொதுவாக காலை "ஸ்பெஷல்" டூட்டிக்குன்னு சொன்னாலே மூக்கால் அழும் பார்ட்டி எல்லாம் கரெக்டான டயத்தில் நல்லா குளித்து பல பல வென ஆஜர்.
ஒரு வழியாக காலை எட்டு மணிக்கு அவர் வீட்டிற்க்கு சென்றோம்.காலிங் பெல்லை அடிக்க நாய் குரைத்தது..அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் கேட்டை திற‌ந்து "யார்?" என்று கேட்டார்..விவரம் சொல்ல....அவரோ மேடம் இப்போதான் எழுந்தாங்க..பெரிய மேடத்தை மீட் பண்ணுங்க என்றார். யாருங்க பெரிய மேடம் என்றேன்? அவர் உடனே அவங்க மம்மி என்றார்..அவர் ஆங்கிலத்தில் 'மம்மி" என்று சரியாக வராமல் உச்சரித்தது எங்களுக்கு சிரிப்பை வரவழைத்தது .கூடவே வந்த கோபால் என்ற பையன் ச‌ற்றே குசும்பன்..அவன் அந்த பெண்ணிடம் நீங்க "ஜிம்மி" யை பார்த்துக்குங்க...நாங்க மம்மிய பார்க்கிறோம் என்றான். நான் அவன் வாயை மூடச்சொல்லி,அவர் அலுவலகத்தில் காத்திருந்தோம்.  



சிறிது நேரத்தில் அந்த நடிகயின் அம்மா வந்தார்கள்.அவ‌ரிடம் விவரம் சொன்னேன். அவர் "அவ இப்போதான் குளிச்சிகிட்டு இருக்கா.அவ மேக்கப் போட்டு வர ஒரு மணி நேரமாவது ஆகும் என்றவர்,அதனால நீங்க அவளிடம் கையெழுத்து வாங்க வேண்டியதை கொடுங்க நான் அவ குளிச்ச உடனே வாங்கிடறேன் என்றார்.நான் சரி என்பது போல தலையை ஆட்ட..கூட இருந்த கோபாலுக்கு முகம் சுருங்கி போனது. சற்றே சுதாரித்த அவன் "சாரி மேடம் எங்களுக்கு நேரேதான் அவங்க கையெழுத்து போடனும் என்றான் கறாராக...அவனது உள்நோக்கம் தெரிந்து எனக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை..


அவ‌ரது அம்மா எழுந்து போனவுடன்.என்னைப்பார்த்து என்ன சார் நீங்க..
நான் இன்னைக்கு எவ்வளவு டீரீம் ல வந்திருக்கேன் தெரியுமா??!!!!!......
என் சரித்திரத்திலே இவ்வளவு சீக்கிரம் எழுந்ததும் கிடையாது இன்னிக்கு நான் குளிச்ச அளவுக்கு குளிச்சதும் கிடையாது.என் பொண்டாட்டி என்னைப்பார்த்து ஆச்சர்ய பட்டு போனா என்றவன்,தொடர்ந்து சார் வொய்ஃப் கிட்ட இதை சொல்லல.. இன்னைக்கு மீட்டிங் இருக்குன்னு சொல்ல்யிருக்கேன் சார்.கேமரா கொண்டு வந்திருக்கேன்..போட்டோ எடுத்த பிறகு காமிக்கலாம்னு இருக்கேன் என்றான்.


சரியென்று கனவில் உட்கார்ந்திருந்த கோபாலோடு,நானும் உட்கார்ந்திருந்தேன்.அப்போது எங்களைப்பார்க்க ஒருவர் வந்தார்.ச‌ற்று உற்று நோக்கிய பிறகுதான் தெரிந்தது அது ".......ஷா வென்று...திரையில் நான் பார்த்திருந்தற்கும் நேரேவும் நிறைய வித்தியாசம்.. மிக ஒல்லியான தேகம் வசீகரம்ற்ற முகம்,கைகளில் ஒடும் நரம்புகள் வெளியே தெரிய என கோபாலின் எல்லா கனவையும் நொறுக்கி தூள் தூளாக்கினார் அந்த கனவுக்கன்னி..

மனதைத்தேற்றிக்கொண்ட கோபால்..ஹலோ மேடம் என்றான்.எல்லா கையெழுத்துக்களையும் பெற்றுக்கொண்ட கோபால்.அவருக்கு தேங்ஸ் சொல்லி மேடம் ஒரு சின்ன ரெகொஸ்ட் என்றான்..என்ன என்று கேட்டவரிடம் உங்களோட ஃபோட்டோ ஒன்னு எடுத்துக்கனும் என்றான்.அவரோ இப்போ ஃபோட்டோ எல்லாம் எடுக்க முடியாதுங்க‌ன்னார்.கோபாலோ அவரை விடுவதாக இல்லை.கடுப்பான அவர் புரிஞ்சிக்கோங்க இன்னும் மேக்கப் போடல என சொன்னவுடந்தான் புரிந்தது கோபாலுக்கு...


நொந்துபோன கோபாலுடன் வேளியேறிய எனக்கு ஒரு நடிகரே ஃபோன் பண்ணினார்.அப்போது எனக்கு தெரியாது ஒரு நல்ல நடிகரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுள்ளது என்று.

முதல் பட‌த்திலேயெ இரண்டு உச்ச நடிகைகளுடன் நடித்தார்.மேலும் ஒரு க்ளூ மேலே சொன்ன நடிகை பெயரின் கடைசி எழுத்துதான் இவர் பெயரின் முதல் எழுத்து.

தொடரும்...



திங்கள், 11 ஜூன், 2012

::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 4

பகுதி 4:‍-

யாரென்று கண்டுபிடித்தீர்களா ? கலையுலக பொட்டின் வாரிசு அவர்.அந்த நேரத்தில் அவர் ஒன்றும் பெரிய ஹீரோவெல்லாம் கிடையாது. சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார்.இன்னும் க்ளூ வேண்டுமா?.இப்போது விளம்பரங்களில் நடித்து வருகிறார்.அப்பன் சேர்த்த காசை தின்று தின்றே அழித்த குடும்பம் அது..
அவர் அப்போது மிசுபிஷி லேன்சர் கார் வைத்திருந்தார்.எதற்கு அந்த "ஹாரன்" சத்தம் என்றால் அய்யா!!!??? வரும்போது ஒடிப்போய் கேட்டை திறக்க வேண்டுமாம்.இல்லாவிட்டால் அன்று நான் பார்த்த காட்சிதான். அவர் அன்று அந்த
வாட்ச்மேனைப்பார்த்து....
"ஏண்டா வேலைக்கார நாயே..என்ன .....டுங்க போன.... என எழுத முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்தார்..எனக்கு மன வேதனை, என்னடா இது நம்மால் தானே இவ்வாறு ஆயிற்று என்று..

ஒரு புறம் தாங்க முடியாத ஆத்திரமும் கோபமும்..

பணக்கார திமிரும்,புகழின்ஆணவமும் அவர் தலையில் குடிகொண்டிருப்பதை நான் கண்ணால் பார்த்தேன்.வெளியில் எவ்வளவு அழகாக பேசும் அவர்களின் உண்மை சொரூபத்தை நான் நேரில் கண்டேன்.

எனக்கு இன்று கூட "அவர்" என்று எழுத தோனவில்லை "அவன்" என்றே எழுத தோணுகிறது.

அன்றைய மாலைப்பொழுதில்,ஒவ்வொரு காராக வந்து நின்றது.அப்போதைய‌ சங்க தலைவரும்,(இப்போது கட்சி தலைவர்) ஒரு காரில் வந்தார்,தமிழில் புரட்சியான நடிகரும் வந்தார்.சமீபத்தில் இறந்த அந்த 'விலங்கு" நடிகரும் வந்தார்.பிறகு முத்தான‌ நடிகரின் வாரிசு நடிகரும் வந்து சேர்ந்தார்.

அப்போது எல்லாரும் "டாடா சஃபாரி" கார்தான் அதிகமாக வைத்திருந்த‌னர்.அதில் ஏ.சி யை போட்டு ஒரு காரில் முத்தான நடிகரின் வாரிசான "அலைகள்" நடிகரும் மற்றொரு காரில் "விலங்கு நடிகரும் உட்கார்ந்திருந்தனர்.

விலங்கு நடிகர் படத்தில் வருவதுபோன்ற மெலிதான எவர்சில்வர் உறை போட்ட அந்த வெளிநாட்டு மருந்து புட்டியை திறந்து குடித்துக்கொண்டே இருந்தார் மேலும் ஒரு புறம் கையில் சிகிரெட் வேறு...

அவரிடம் சற்றே பேச்சை கொடுக்க அவர் என்னைப்பற்றி கேட்டுவிட்டு,பேச ஆரம்பித்தார்..சிறிது நேரத்தில் திடீரென அவ‌ருக்கு போன் வர யாரிடத்திலோ கன்னடத்தில் பேசிக்கொண்டிருந்தார்.நான் பெங்கலூரூவில் வேலை செய்து கொண்டிருந்த போது,ஒரளவு கன்னடம் பேச பழகியிருந்ததால்,அவரிடம் கன்னடத்தில் பேச முயற்சிக்க சற்று வித்தியாசமாக உற்று நோக்கிய அவர்,பின் பேச்சை தொடர்ந்தார்...

அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே, முன்னால் வந்த சில நடிகர்களை
அந்த பொட்டின் வாரிசு ஒன்று கூட்டிநுழைவு வாயில் அருகில் பக்கவாட்டில் அமைந்துள்ள அந்த கட்டிடத்தின் முதல் மாடிக்கு அனைவரையும் அழைத்துச்சென்றார்..
.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க ,அலைகள் நடிகரால் ஒரு நிமிடம் கூட ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை.காரில் இருந்து வெளியே வருகிறார் இரண்டு நிமிடம் இருக்கிறார்,வேர்த்துக்கொட்டுகிறது,கைகள்,கழுத்து,உதடு எல்லம் சற்றே நிறம் மாறி இருக்க, கைகள் வேறு நடுக்கின்றது.அனைவரின் பார்வையும் அவர் மேல் இருக்க, பொட்டின் வாரிசு அவரையும் முதல் மாடிக்கு கூட்டிச்சென்றார்.

தொடரும்..