கடந்த வருடம் எனது நண்பர்களுடம் அஹோபிலம் சென்று வந்தேன்.தெரிந்த நண்பர் ஒருவரிடம் அவரது மகிழுந்தை இரவல் பெற்று ,சென்று வந்தோம் ..மறக்க முடியாத பயணம் அது...
அஹோபிலம் சென்னையிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில்ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் மலையில் அமைந்துள்ளது. ஒன்பது நரசிம்மர் கோவில்கள் 5 கி .மீ சுற்றளவில் அமைந்துள்ளன .

அதோடு சேர்ந்து மலையடிவாரத்தில் "பிரகலாதவரத வரதன்" க்காக தனி சன்னதியும் அமைந்துள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காகவும்,தினமும் பூஜை செய்வதில் உள்ள சிரமத்தினாலும் ஒன்பது கோவில்களின் உற்சவர்கள் இந்த கோவிலில் வைக்கப்பட்டுள்ளது.அஹோபிலத்தில்தான் நரசிம்மர் ஹிரண்யகாசிபு விடமிருந்து பிரகலாதனை காப்பாற்றினார். மகாலக்குமி வேட்டைகாரர்களின் செஞ்சுலக்குமி யாக அவதாரம் எடுத்து கடவுளை மணந்தார். ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் பார்ப்பது எளிது அல்ல.
இரண்டு நாட்களாவது வேண்டும்.தங்குவதற்கு தனியாரால் நடத்தப்படும் விடுதிகளும் ,அஹோபில மடத்தின் விடுதியும் இருக்கிறது .
மேலதிக தகவல்களுக்கு : -http://www.ahobilamutt.org
இத இப்பதான் கேள்வி படுறேன்.
பதிலளிநீக்குgo to dashboard-->settings--->comments-->word verification-->no
பதிலளிநீக்கு