புதன், 9 மே, 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 7

பகுதி 7:-

வேலைப்பளுவின் காரணமாக 3 வாரங்கள் இடைவெளி ஏற்பட்டு விட்டது.

நாம் இதுவரை கலோரிகள் பற்றியும்,அதன் வகைகள் பற்றியும் பார்த்தோம் மேலும் உணவின் சில வகைகளைப் பார்த்தோம். 

நான் பகுதி 2இல் சொல்லியபடி அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது ஒரு
Excel ல் கோப்பை உருவாக்கிகொள்ளுங்கள்.கணினி இல்லாதவர்கள் ஒரு நோட்டை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.கீழே கொடுக்கபடும் சில குறிப்புகள் முன்னே சொன்னவைதான் உங்கள் ஞாபகத்திற்க்காக மீண்டும் நினைவூட்டல்.

முதலில் உங்கள் தற்போதய எடை,இடுப்பு சுற்றளவு ஆகியவற்றை குறித்துக்கொள்ளுங்கள்.அடுத்ததாக நீங்கள் உங்கள் உயரத்தை சென்ட்டிமீட்டரில் அளந்து அதில் நூறை கழிக்கவும்.வரும் மீதியெ உங்கள் எடையாக இருக்க வேன்டும்.

உதாரணம் : எனது உயரம் 171 செ.மீ எனவெ 171 கழித்தல் 100 = 71 கிலோ.(இருக்கவேண்டியது)


ஆனால் எனது எடை 85 என்றால் 85‍ கழித்தல் 71 = 14 கிலோ.

1 கிலோவிற்கு 7700 கலொரிகள் எனவே 14*7700 = 107800 கலோரிகள் அதிகம் உள்ளது. அவை அனைத்தயும் நாம் எரித்து, எடையை குறைக்க வேண்டும்.

தினமும் நீங்கள் சாப்பிடும் உணவை அளவோடு எழுத ஆரம்பியுங்கள். இதற்கு முன் எழுதிய பதிவுகளில் இருந்து கலோரி அளவுகளை வைத்து தினமும் எவ்வளவு கலோரிகள் சாப்பிடுகிறீர்கள் என்பதை கண்டிப்பாக எழுதி வரவும்.
ஏனெனில் இதன் மூலம் தான் நாம் எவ்வளவு கலோரிகள் அதிகம் எடுத்துக்கொள்கிறோம் என்பது தெரிய வரும்.அதை வைத்து தான் நமது உணவு பழக்கத்தை மாற்றி அமைக்கமுடியும்.அடுத்ததாக நீங்கள் கட்டாயமாக தினமும் குறைந்த அளவாவது பழங்கள்,காய்கறிகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.இவை அனைத்தும் உடல் எடையை குறைக்க (மருத்துவரிடம் செல்லாமல்,பணம் செலவு செய்யாமல்)தேவைப்படும் அடிப்படை முயற்சிகள். நீங்கள் இதுவரை எனது பதிவுகளை படிக்காதவர்களாக இருந்தால் தயவு செய்து முதல் பதிவிலிருந்து படிக்கவும்.

நீங்கள் இவ்வாறு எழுத ஆரம்பித்தால் ஒரு வாரத்தில் நமக்கு நாமே,சராசரியாக எவ்வளவு உணவு அருந்துகிறோம் என்பது பிடிபட்டுவிடும்.

பிறகுதான் உணவு பழக்கமும்,எடை குறைப்பு பயிற்சியும்...

தொடரும்....
 

2 கருத்துகள்:

  1. பாலாஜி ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி.உன் பதிவை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.இனி நிறைய பார்வையாளர்கள் வருவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி மணி.உன்னுடைய ஃபிளாக்கில் இணைப்பு கொடுத்துள்ளாய்.நன்றி நண்பனே!

    பதிலளிநீக்கு

::: வணக்கம் :::

உங்கள் வருகைக்கு நன்றி !!!

ஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.

அன்புடன்

ஆரூரான்