புதன், 13 ஜூன், 2012

::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 5

பகுதி 5:‍-



மாடிக்கு எல்லோரையும் அழைத்துப்போன அந்த நடிகர்,தள்ளாட்டத்துடனே வெளியே வந்தார். இதற்கிடையில் நான் பார்க்கும் நடிகர் எல்லாரிடமும் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

இந்த கூட்டத்தில் இருந்து எஸ்கேப் ஆகி வெளியே வந்த புரட்சி நடிகரிடம் பேச ,அவர் தப்பா எடுத்துக்காதீங்க,இந்த விடயமெல்லாம் நம் மனைவிதான் கவனிச்சிக்கிறாங்க,ஆஃபீஸ் நம்பருக்கு ஃபோன் செய்து பாருங்க என்றவர், நாங்கள் ரெகுலரா 10 வருடமா ஒரே இடத்தில் வாங்கி வர்றோம் அதனால தேவைப்படாதுன்னு நினைக்கிறேன் என்றார்.இதற்கு நடுவில் எனக்கு உதவிய அந்த பி.ஆர்.ஒ மற்ற பி.ஆர்.ஒ க்களிடம் எனது நம்பரை, அனைவரிடமும் கொடுக்க சொல்லி இன்ஸ்டரக்ஷன் கொடுத்தார்.


அந்த நேரத்தில் "பாத்ரூமில் குளித்து பேமஸ் ஆன அந்த நடிகையின் மேனேஜர் கூப்பிடச்சொன்னதாக" அலுவலகத்தில் இருந்து ஃபோன் வந்தது.அப்போது அவர் நல்ல பிசி நடிகை."பாத்ரூம் சமாச்சாரம் எல்லாம் சமீபத்தில் நடந்ததுதான்.அப்போது அவர் கீழ்பாக்கம் அருகில் ஒரு ஃபிளாட்டில் வசித்து வந்தார்.அவர் மேனேஜருக்கு ஃபோன் செய்தவுடன்,அவர் மேடம் உங்களை உடனேவரச்சொல்றார் ஏன்னா ,அவர் நாளைக்கு காலையில கும்பகோணத்திற்க்கு சூட்டிங் போறார். அத‌னால நேரம் இல்ல இப்பவே டாகுமெண்டேஷனை முடிச்சிக்கலாம் என்றார்.


நான் அவரிடம்,நாளை எப்போது கிளம்புகிறார்கள் என்றேன்.9 மணிக்கு என்றார்.இப்போ சங்கத்தில இருக்கேன் நாளைக்கு காலையில 8 மணிக்கு வந்து கொடுக்கட்டுமா என்று கேட்டேன்.அவர் மேடத்திடம் கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்றேன் என்றார். ஒரு வழியாக டைம் ஓ.கே ஆக,இதை அலுவலகத்தில் சொன்னேன். எனது டீமில் உள்ளவர்களுக்கு தாங்களும் ஒன்றிர‌ன்டு பேரையாவது சந்திக்க வேண்டும் எனவே நான் நீ என சண்டை, ஒரு வழியாக சமாளித்து மீன் நடிகையிடம் டாகுமெண்ட் கலெக்ட் பண்ண இவர், இடுப்பழகியிடம் செக் கலெக்ட் செய்ய இன்னொருவர் என ஆளொக்கொரு வேலை வழங்கப்பட்டது.


பொதுவாக காலை "ஸ்பெஷல்" டூட்டிக்குன்னு சொன்னாலே மூக்கால் அழும் பார்ட்டி எல்லாம் கரெக்டான டயத்தில் நல்லா குளித்து பல பல வென ஆஜர்.
ஒரு வழியாக காலை எட்டு மணிக்கு அவர் வீட்டிற்க்கு சென்றோம்.காலிங் பெல்லை அடிக்க நாய் குரைத்தது..அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் கேட்டை திற‌ந்து "யார்?" என்று கேட்டார்..விவரம் சொல்ல....அவரோ மேடம் இப்போதான் எழுந்தாங்க..பெரிய மேடத்தை மீட் பண்ணுங்க என்றார். யாருங்க பெரிய மேடம் என்றேன்? அவர் உடனே அவங்க மம்மி என்றார்..அவர் ஆங்கிலத்தில் 'மம்மி" என்று சரியாக வராமல் உச்சரித்தது எங்களுக்கு சிரிப்பை வரவழைத்தது .கூடவே வந்த கோபால் என்ற பையன் ச‌ற்றே குசும்பன்..அவன் அந்த பெண்ணிடம் நீங்க "ஜிம்மி" யை பார்த்துக்குங்க...நாங்க மம்மிய பார்க்கிறோம் என்றான். நான் அவன் வாயை மூடச்சொல்லி,அவர் அலுவலகத்தில் காத்திருந்தோம்.  



சிறிது நேரத்தில் அந்த நடிகயின் அம்மா வந்தார்கள்.அவ‌ரிடம் விவரம் சொன்னேன். அவர் "அவ இப்போதான் குளிச்சிகிட்டு இருக்கா.அவ மேக்கப் போட்டு வர ஒரு மணி நேரமாவது ஆகும் என்றவர்,அதனால நீங்க அவளிடம் கையெழுத்து வாங்க வேண்டியதை கொடுங்க நான் அவ குளிச்ச உடனே வாங்கிடறேன் என்றார்.நான் சரி என்பது போல தலையை ஆட்ட..கூட இருந்த கோபாலுக்கு முகம் சுருங்கி போனது. சற்றே சுதாரித்த அவன் "சாரி மேடம் எங்களுக்கு நேரேதான் அவங்க கையெழுத்து போடனும் என்றான் கறாராக...அவனது உள்நோக்கம் தெரிந்து எனக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை..


அவ‌ரது அம்மா எழுந்து போனவுடன்.என்னைப்பார்த்து என்ன சார் நீங்க..
நான் இன்னைக்கு எவ்வளவு டீரீம் ல வந்திருக்கேன் தெரியுமா??!!!!!......
என் சரித்திரத்திலே இவ்வளவு சீக்கிரம் எழுந்ததும் கிடையாது இன்னிக்கு நான் குளிச்ச அளவுக்கு குளிச்சதும் கிடையாது.என் பொண்டாட்டி என்னைப்பார்த்து ஆச்சர்ய பட்டு போனா என்றவன்,தொடர்ந்து சார் வொய்ஃப் கிட்ட இதை சொல்லல.. இன்னைக்கு மீட்டிங் இருக்குன்னு சொல்ல்யிருக்கேன் சார்.கேமரா கொண்டு வந்திருக்கேன்..போட்டோ எடுத்த பிறகு காமிக்கலாம்னு இருக்கேன் என்றான்.


சரியென்று கனவில் உட்கார்ந்திருந்த கோபாலோடு,நானும் உட்கார்ந்திருந்தேன்.அப்போது எங்களைப்பார்க்க ஒருவர் வந்தார்.ச‌ற்று உற்று நோக்கிய பிறகுதான் தெரிந்தது அது ".......ஷா வென்று...திரையில் நான் பார்த்திருந்தற்கும் நேரேவும் நிறைய வித்தியாசம்.. மிக ஒல்லியான தேகம் வசீகரம்ற்ற முகம்,கைகளில் ஒடும் நரம்புகள் வெளியே தெரிய என கோபாலின் எல்லா கனவையும் நொறுக்கி தூள் தூளாக்கினார் அந்த கனவுக்கன்னி..

மனதைத்தேற்றிக்கொண்ட கோபால்..ஹலோ மேடம் என்றான்.எல்லா கையெழுத்துக்களையும் பெற்றுக்கொண்ட கோபால்.அவருக்கு தேங்ஸ் சொல்லி மேடம் ஒரு சின்ன ரெகொஸ்ட் என்றான்..என்ன என்று கேட்டவரிடம் உங்களோட ஃபோட்டோ ஒன்னு எடுத்துக்கனும் என்றான்.அவரோ இப்போ ஃபோட்டோ எல்லாம் எடுக்க முடியாதுங்க‌ன்னார்.கோபாலோ அவரை விடுவதாக இல்லை.கடுப்பான அவர் புரிஞ்சிக்கோங்க இன்னும் மேக்கப் போடல என சொன்னவுடந்தான் புரிந்தது கோபாலுக்கு...


நொந்துபோன கோபாலுடன் வேளியேறிய எனக்கு ஒரு நடிகரே ஃபோன் பண்ணினார்.அப்போது எனக்கு தெரியாது ஒரு நல்ல நடிகரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுள்ளது என்று.

முதல் பட‌த்திலேயெ இரண்டு உச்ச நடிகைகளுடன் நடித்தார்.மேலும் ஒரு க்ளூ மேலே சொன்ன நடிகை பெயரின் கடைசி எழுத்துதான் இவர் பெயரின் முதல் எழுத்து.

தொடரும்...



2 கருத்துகள்:

::: வணக்கம் :::

உங்கள் வருகைக்கு நன்றி !!!

ஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.

அன்புடன்

ஆரூரான்