புதன், 22 ஏப்ரல், 2026

2026 தேர்தல் - ஆட்சி மாற்றம்

 எனது வாழ்நாளில் நான் 13 முறைக்கு மேல் வாக்கு செலுத்தி விட்டேன் ..

Key General Election Cycles (1996–2024):

  • Assembly Elections: 1996, 2001, 2006, 2011, 2016, 2021.
  • Lok Sabha Elections: 1996, 1998, 1999, 2004, 2009, 2014, 2019, 2024. 

Local body elections were also held separately, starting with the first local elections in October 1996, followed by 2001, 2006, 2011, and 2019


ஆனால் இந்த தேர்தல் சற்று வித்தியாசமானது ..

தி.மு . மற்றும் .தி.மு. என்ற இரண்டு கட்சிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு விடுதலை கிடைக்குமா என்று பலபேரின் எண்ணங்கள் மாறியுள்ளது ..

நான் 2009 க்கு பிறகு திராவிட கட்சிகளுக்கு வாக்கு செலுத்துவதில்லை.எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் திராவிட கட்சிகளோடு நீண்ட தொடர்பு உண்டு ..எங்கள் உறவினர்களில் பலர் நீதிக்கட்சி ஆரம்பித்த நாள் முதலும் , .வே .ரா வின் தொடர்பிலும் இருந்துள்ளனர். எனது தாயாரின் ஒன்று விட்ட தாத்தா ஒருவர்தான் திரு கருணாநிதி அவர்களின் முதல் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்..அது முடிந்து போன ஒன்று..

இந்த முறை சுமார் 20% வாக்காளர்கள் தான் ( 18-29 வயதுள்ள ) இந்த தேர்தலின் முடிவை மாற்றி எழுத போகிறவர்கள் . அதில் மிகுந்த வருத்தமுள்ள செய்தி என்னவெனில் , திரு விஜய் அவர்களை ஆதரிக்கும் பெரும்பான்மையானோர் இந்த வகையில் வருகின்றனர் .

நான் அறிந்த வரையில் அவர்கள் , அவரை ஆதரிப்பது என்பது ஒரு "பிரபலங்கள் மீதான அதீத பற்று" அல்லது "பிரபல வழிபாட்டு மனநிலை" - CWS என்ற நிலையிலே உள்ளது ..

Celebrity Worship Syndrome (CWS) என்பது ஒரு நபர் ஒரு பிரபலத்தின் மீது அளவுக்கதிகமான ஈடுபாடு அல்லது பித்து (Obsession) கொள்வதைக் குறிக்கும் ஒரு உளவியல் நிலையாகும். இதைத் தமிழில் "பிரபலங்கள் மீதான அதீத பற்று" அல்லது "பிரபல வழிபாட்டு மனநிலை" என்று அழைக்கலாம்.

உளவியலாளர்கள் இதை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்கள்:

1. பொழுதுபோக்கு மற்றும் சமூக நிலை (Entertainment-Social)

இது மிகவும் சாதாரணமான நிலை. ஒரு பிரபலத்தின் நடிப்பு, விளையாட்டு அல்லது திறமைக்காக அவர்களைப் பின்தொடர்வது, நண்பர்களுடன் அவர்களைப் பற்றிப் பேசுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டது. இது பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

2. தீவிரமான தனிப்பட்ட நிலை (Intense-Personal)

இந்த நிலையில், அந்த நபருக்கும் பிரபலத்திற்கும் இடையே ஒரு ரகசியமான அல்லது ஆழமான பிணைப்பு இருப்பதாக அவர்கள் நம்பத் தொடங்குவார்கள். உதாரணமாக, "அவர் எனக்காகவே பிறந்தவர்" அல்லது "அவர் கஷ்டப்பட்டால் எனக்கு வலிக்கிறது" என்று தீவிரமாக உணர்வார்கள்.

3. எல்லை மீறிய மனப்பிறழ்வு நிலை (Borderline-Pathological)

இது மிகவும் ஆபத்தான நிலை. இதில் ஒரு நபர்:

  • அந்த பிரபலத்திற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்வார்.
  • பிரபலத்தின் மீது யாராவது விமர்சனம் வைத்தால் வன்முறையில் ஈடுபடத் துணிவார்.
  • அவர்களின் அன்றாட வாழ்க்கை, வேலை மற்றும் குடும்ப உறவுகளைப் பாதிக்கும் அளவிற்கு இந்தத் தாக்கம் இருக்கும்.

எனவே , இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல் ..நாம் செய்ய வேண்டியது ..

1. முதலில் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும்

2.நமது மண்ணை , நீரை , சுற்று சூழலை , எதிர்காலத்தை பாதுகாக்கும் கொள்கை கொண்ட கட்சியை தேர்வு செய்யுங்கள்

3.அனைவைரையும் வாக்கு செலுத்த சொல்லுங்கள்

4.உங்கள் வீட்டில் GenZ 's இருந்தால் புரிதலை ஏற்படுத்த முயலுங்கள் ..

நல்ல மாற்றம் வரும் என்று நம்புவோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

::: வணக்கம் :::

உங்கள் வருகைக்கு நன்றி !!!

ஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.

அன்புடன்

ஆரூரான்