பகுதி 8:-
அடுத்ததாக நான்இருவரைப்பற்றி எழுதபோகிறேன்.அதில் ஒருவர் சினிமாத்துறைக்கு சம்பந்தமில்லாத நபர் வெளிநாட்டில் கலைநிகழ்ச்சிக்கு நடிகர்,நடிகைகள் எல்லாரும் போகும்போது,சினிமாத்துறைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு நபர் சென்று வருவார்.மற்றொருவர்…விவரம் கீழே…என்னங்க இது நடிகர்களின் நிஜ முகங்கள்ன்னு பேர் வச்சிட்டு வேற யாரையோப்பற்றி எழுதப்போறீங்க என்று கேட்பது புரிகிறது...
ஆனா இது போன்ற நபர்களை நீங்களும் தெரிஞ்சிக்கனுமே அதுக்குதான்.
நாம் அடுத்ததாக பார்க்கப்போவது யாரைப்பற்றி தெரியுமா?...
நான் குறிப்பிடும் இவர் ஒரு பல முகங்களை கொண்டவர்.இவர் பேர் இனிஷியலே ரொம்ப குளிர்ச்சியாகத்தான் இருக்கும்.பகுதி நேர அரசியல்வாதி.அதாங்கதேர்தல் வரும்போது கட்சி கூட்டம் நடத்துவார்.அடுத்த கூட்டம் அடுத்த தேர்தலுக்குதான்.சொந்தமா ஹோட்டல்,அப்புறம் மெடிக்கல் காலேஜ் எல்லாம் இருக்கு..கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி இவங்க காலேஜ கூட அம்மா ஆட்சியில இடிச்சிட்டாங்க..இப்போ யாருன்னு தெரிஞ்சிருக்கும்...
அப்போது அவர்களுக்கு நார்த் ஃபோக் சாலையில் ஒரு அலுவலகம் இருந்தது.அங்குதான் அவரை சந்திக்க சென்றேன்.அப்போது அவரிடம் உங்களுக்கு எப்படி சார் சினிமா உலகத்துடன் தொடர்பு என்றேன்? அவர் சிரித்துக்கொண்டே.நமக்கு ரொம்ப நாளாக இவங்களோட தொடர்பிருக்கு,ஃபாரின் போகும்போதெல்லாம் நம்மள கூப்பிட்டு விடுவாங்க என்ற அவர் பதில் எனக்கு திருப்தியளிக்காத்தால் யார் சார் கூப்பிட்டு விடுவாங்க என நான் கேள்வியாக கேட்க...அவர் என் கேள்விக்கு சாமார்த்தியமாக சிரிப்பையே பதிலாக தந்தார்.ஆனால் என்ன "கலைச்சேவை" செய்ய போகிறார் என்று சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும்..
அடுத்து நான் சந்தித்தது இன்று மிகப்பெரும் அரசியல் தலைவராக இருக்கிற மாலுமி நடிகர்.நான் அவரை முதலில் சந்தித்தது நடிகர் சங்கத்தில்தான்.அப்போது உடல் எடை கம்மியாக நன்றாக இருந்தார் கட்சி ஆரம்பிப்பதைப்பற்றி ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன.அவரைச்சுற்றி எப்போது நான்கைந்து பேர் என கம்பீரமாக ஆனால் எளிமையாக இருந்தார்.உட்காருங்க சார் என்றார்.ஒரு பொறுப்பான தலைவருக்குரிய அனைத்து தகுதிகளுமே அவரிடமிருந்ததை என்னால் உணர முடிந்தது.நிறைய நேரம் பேசினோம்.
அவருடைய நண்பருடன் அவர் சேர்ந்து நடத்திய ஃபிலிம் புரொடக்சன் அலுவலகம் 100 அடி சாலையில் இயங்கி வந்தது.அப்போது அது உதவி இயக்குனர்களின் கூடாரம் என்றே சொல்லலாம்.நிறைய பேருக்கு உதவி செய்வதை நான் கண்ணால் கண்டிருக்கிறேன்.அது மட்டுமல்லாது,நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து,அதன் மதிப்பையும் உயரச்செய்தவர்.அவருக்கு அப்போது மது பழக்கம் இருந்தது ஆனால் அவர் அதற்கு அடிமையில்லை. ஆனால் இன்று அவருக்கு இருக்கும் மது பழக்கம் எப்படி அவரை ஆட்கொண்டது என எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.
பழகிய நாட்களில் நன்றாகவே பழகினார்.மேலும் அனைவரிடமும் மரியாதையாகவே நடந்து கொண்டார்.என்னுடைய பிசினஸ் பற்றி பேச,நான் தான் ஏற்பாடு பண்றேன் அதனால எங்க ஆளுங்க பார்த்துப்பாங்க என்றார்.நிகழ்ச்சியில் யார் யாரை கலந்துகொள்ள அனுமதிப்பது என்ற முடிவை எடுக்க அவ்ருக்கே அதிகாரம் வழ்ங்கப்பட்டிருந்தது.அவ்வாறு கலந்து கொள்பவர்களுக்கு அவர்களின் மார்க்கெட்டுக்கு தகுந்த மாதிரி சகுமானம் இந்திய ரூபாயில் சங்கத்திலேயே வைத்து கொடுக்கப்பட்டது.
அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதில் மிக அக்கறையாக ,வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் நடிகர்களை அதிகம் தேர்ந்தெடுத்தார்.அவரின் அந்த குணம் என்னை இன்று வரை என்னால் மறக்க இயலவில்லை.என்ன காரணத்தினாலோ அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அது மட்டுமில்லை என்றால் அவருக்கு தலைமை தாங்கும் தகுதி இருப்பதை யாரும் மறுக்க இயலாது...
தொடரும்...