பகுதி 2:-
நான் முதலில் கூப்பிட்டது சமீபத்தில் ஏழரையை தானே இழுத்துக்கொண்டு படம் இல்லாமல் இப்போது தவித்துக்கொண்டிருக்கும் அந்த சிரிப்பு நடிகர்.
எதற்கு முதலில் அவரை கூப்பிட்டேன் என்றால்,உங்கள் எல்லாரையும் போல எனக்கும் அவரின் நடிப்பு பிடிக்கும். நான் அவரை முதலில் அழைத்த போது அவரது தோழர் (தற்போது உயிருடன் இல்லை,இறந்து விட்டார்) தான் போனை எடுத்தார் என்னை அறிமுகப்படுத்தியவுடன்,
அவரிடம் போனை கொடுத்தார் ,பேசினேன்.
மிகுந்த மரியாதையுடன் அண்ணே போட்டு கூப்பிட்டார். என்னை அவரது அலுவலகத்துக்கு வருமாறு சொல்ல,நான் எவ்வளவுக்கு அண்ணே "பாரின் எக்சேஞ்" வேனும் என்றேன். உடனே அவர் சொன்ன "நம்பர்" கேட்டு கிறுகிறுத்துப்போனேன்.
ஏனென்றால்,அந்நிய செலவாணி எடுத்துச்செல்ல "ரிசர்வ் வங்கி" நிறைய நிபந்தனைகளை விதித்துள்ளது.வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்கு அதைப்பற்றி தெரிந்திருக்கும். நாம் நினைக்கின்ற ரூபாய்க்கெல்லாம் "பாரின் எக்சேஞ்" எடுத்து செல்ல முடியாது.டூரிஸ்ட் என்றால் ஒரு அளவும்,பிஸினஸ் டிரிப் என்றால் கூடுதலாகவும் எடுத்து செல்லலாம்.மேலும் அப்போது,
பாஸ்போர்ட்டில் அதை கொடுக்கும் கம்பெனி என்டார்ஸ் செய்யவேண்டும்.
அவர் சொன்ன "நம்பர்" எல்லாம் கள்ளத்தனமாகத்தான் எடுத்துச்செல்லலாம்,
கஸ்டம்ஸில் செக் செய்தால் ஃபைன் கட்ட வேண்டியதுதான்.
அவரிடம் அதை எடுத்துச்சொல்ல,அவரோ அப்பாவியாக,பரவாயில்லை அண்ணே அட்ஜஸ்ட் பண்ணி கொடுங்க என்றார்.எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
அந்த நேரத்தில்தான் அவர் வீட்டில் இன்கம்டெக்ஸ் ரெய்டெல்லாம் ஆகி,பெரும் தொகையை இழந்திருந்தார்.அவரின் மற்றொரு (விவரமான!!!)நண்பர் மூலம் எடுத்து சொல்லி புரிய வைத்தோம்.
ஒரு வழியாக தொகை உறுதியாக,மறுநாள் அவருக்கு தேவையான கரன்ஸியை எடுத்துக்கொள்ள,எனது பாஸ்(தற்போது அவர் அந்நிறுவனத்தின் " ஃபிராடக்ட் ஹெட்" ஆக உள்ளார்)தானும் அவரைப்பார்க்க வந்தார்.
சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்துக்கு சென்றோம்.அப்போது வீடும் அதன் அருகிலேயே இருந்தது.சிறிது நேரத்தில் வந்தார். எங்களுக்கு கை கொடுத்த அவர், பிறகு உதவியாளர்களிடம் சொல்லி காஃபி வரவழைத்து கொடுத்து உபசரித்தார். அவர் பேசும்போது,தான் பட்ட கஷ்டங்களை சொல்லி ஈசியாக தான் இந்த அளவிற்க்கு உயர்ந்து விடவில்லை என்பதை சுட்டிகாட்டினார்.
எனது பாஸுக்கோ அவரை நடிக்க சொல்லி பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது.அதை அவரிடத்தில் சொல்ல உடனே நடித்துகாட்டினார்.(ஊஊஊஉ......என அவரது சிறப்பு அழுகையும் சேர்த்துதான்).தனது மணியான மகனை அறிமுகப்படுத்தி அவன் டியூசனுக்கு ஒரு கம்பியூட்டர்(அவருக்கு லேப்டாப் என்று சொல்ல தெரியவில்லை) கேட்பதாக சொல்லி ,அதைப்பற்றி விவரம் கேட்டார். நான் உடனே என்ன படிக்கிறான் என்றேன் .8வது என்றார்.எதற்கு 8வது படிக்கிற பையனுக்கு என்றேன்? உடனே அவர் "அய்யோ! அவன் இதை வாங்கி கொடுத்தாலாவது எதாவது படிப்பான் நினைக்கிறேன்" என்றார்.
பிறகு நாங்கள் சொன்ன அப்ளிகேஷனில் எல்லாம் அவர் நண்பரிடம் கேட்டு,கேட்டு கையெழுத்து போட்டார்.ஒரு கையெழுத்து போடவே நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார்.பிறகு பேமண்ட் பற்றி கேட்டோம்.நீங்க உட்காந்திருக்கும் சோஃபா விலிருந்து மாறி சேர் ல் உட்காருங்க என்றார். எங்களுக்கு ஏன் என்று புரியவில்லை.பிறகு அந்த சோஃபா வை நகர்த்த அதன் கீழே கருப்பு பாலித்தீன் கவரில் கட்டு கட்டாய் காந்தி பார்த்து சிரித்தார்.ஏதோ பழைய புத்தகத்தை அடுக்கி வைத்திருப்பது போல வைத்திருந்தார்கள்.
நான் :ஃபாரின் எக்சேஞ்" இல் வேலைப்பார்த்தாலும்,அவ்வளவு காந்தியை இப்படி ஒரு கோலத்தில் பார்த்ததில்லை.அதிலிருந்து 3,4 கவரை எடுத்து எண்ணுங்கள் என்றார்.
நானோ அவரிடம் செக் கொடுத்திடுங்க (குறிப்பிட்ட தொகைதான் கேஷ் ஆக வாங்கலாம்) என்று கேட்டேன்.
அவர் வெண்ணிலா கபடி குழு சூரி மாதிரி மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க(அட்ஜஸ்ட் ப்ண்ணிங்க என்று...)..அவருக்கு புரியவைப்பதற்க்குள் ஸ்ஸ்ஸ்.....அப்ப்ப்ப்ப்பாடா.....என்று ஒரு வழி ஆகிவிட்டது.
அப்போதுதான் புரிந்தது சினிமா உலகத்தில் காந்தியை எவ்வாறு கையாலுகிறார்கள் என்று. ஒரு வழியாக என் பாஸை அனுப்பி விட்டு
செக் குக்காக காத்திருந்தேன்.
தொடரும்...
arumai nanba....kathirukiren adutha pagathirku..
பதிலளிநீக்குwhen is the next post
பதிலளிநீக்குthis evening friend
நீக்குநல்ல பரபரப்பா போகுது பாலாஜி ...தொடரவும்.
பதிலளிநீக்குநன்றி மணி..
நீக்கு