பகுதி 2 :-
நாம் உண்ணும் உணவின் சத்துக்கள் கலோரிகளாக கணக்கிடப்படுகின்றன.அந்த கலோரிகள்தான் நாம் செய்யும் வேலையை பொறுத்து உடலில் இருந்து எரிக்கபடுகின்றன.ஒரு சாதாரண ஆண்மகனுக்கு சுமார் 2300 கலோரிகள் வரை தினசரி தேவைப்படும்.அதுஅவர்கள் செய்கின்ற வேலை, சூழ்நிலையை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதைத்தாண்டி நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் கலோரிகள் நமது உடலில்சேர்ந்து நமது எடையை
கூட்டிக்கொண்டே வரும்.
கிராமங்களில் பெரியவர்கள் உணவு பரிமாறும் போது,
"வளர்கின்ற வயசு நல்லா சாப்பிடு என்பார்கள் "
ஒவ்வொருமனிதனுக்கும் தனது 30 வயது (தோரயமாக)வரைஉடல்உறுப்புகள் வளர்ச்சி அடைந்து வரும் .ஒவ்வொரு மனிதனுக்கும் அதுமாறுபடும்.அதனால் அதுவரை அதிகமாக உண்ணப்படும் உணவின் சத்துக்கள் உடல் வளர்ச்சிக்கு உதவும் .30 வயதை கடந்தவுடன் ,நமது உணவை நாம் பார்த்து /கணக்கிட்டு சாப்பிடுவது மிக அவசியம்."எல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கு,சாத்தியமா? என்று கேட்பது புரிகிறது ".கண்டிப்பாக சாத்தியம்.
இப்போது நான் என்ன செய்தேன் என்பதை கூறுகிறேன்.
முதலில் எனது உடல் எடையை கணக்கிட்டேன்,பிறகு இடுப்பு,மார்பு,தொடை பகுதி அனைத்தையும் இன்ச் இல் கணக்கிட்டு,ஒரு "எச்செல்" fileஇல்storeசெய்தேன்.
அந்த மருத்துவர் எனக்கு சொன்னது 22 கிலோ குறைக்க வேண்டும்என்று.
ஆதலால்,முதலில் எவ்வளவு கலோரி ஒரு கிலோ என்று கண்டறிந்தேன்.
1 கிலோ = 7700 கலோரிகள் . ஆக 22 கிலோவிற்கு 1,69,400 கலோரிகளை நான் எரித்தாக வேண்டும். பெரிய்ய்ய்ய ....முயற்சிதான் .ஆகட்டும் ஒரு கை பார்த்து விடுவோம் என்று முடிவு செய்தேன் ...
அடுத்து நான் முதல் நாளில் என்ன சாப்பிட்டேன் என்று குறிக்க ஆரம்பித்தேன்.அதன் பிறகுதான் தெரிந்தது நான் ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுகிறேன் என்று .!?
காலையில் 1 டம்பளர் காபி ,அதன் பிறகு காலையில் சிற்றுண்டி 4 தோசை சாம்பார் உடன் ..11 மணிக்கு 2 போண்டா ,தேநீர் 1 கப்,மதியம் சாதம் ,சாம்பார் ,ரசம் ,மோர் ,காய்கறி ,மாலை தேநீர் மீண்டும் எண்ணெய் பலகாரம் ,இரவு அடை அவியல் அப்புறம் 2 வாழைப்பழம் 1 கப் பால் ...கேட்கவே தலை சுத்துகிறதா .எவ்வளவு தெரியுமா மொத்த கலோரிகள் ? 3300
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
::: வணக்கம் :::
உங்கள் வருகைக்கு நன்றி !!!
ஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.
அன்புடன்
ஆரூரான்