செவ்வாய், 17 ஏப்ரல், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 6

பகுதி 6:-

சித்திரை திருநாளுக்காக ஊருக்கு சென்றிருந்ததால் தொடர் சற்று தாமதமாக வருகிறது.

நான் பகுதி - 4 ல் சொல்லியபடி முதலில் நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகளின் அளவை பார்த்தோம்.அடுத்து ஒத்துக்கொள்ளும் ,ஒத்துக்கொள்ளாத உணவு பற்றி பார்ப்போம்.

ஒவ்வொருவருக்கும் முன்பு சொன்னது போல் அவரவர் உடல் அமைப்பு மாறுபட்டு இருக்கும்.அதனால் ஒருவருக்கு காரம் அதிகம் பிடிக்கும் ,சிலருக்கு இனிப்பு அதிகம் பிடிக்கும்.அவ்வாறு பிடித்த உணவை நாம் சாப்பிடும் போது அது செரிமானம் ஆக வேண்டுமே ?அது மிக முக்கியம்.

எனக்கு நிலக்கடலை மிகவும் பிடிக்கும் ஆனால் அது எளிதில் எனக்கு செரிமானம் ஆகாது .அது போல சிலருக்கு இனிப்பு இரவில் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும் ,இவை அனைத்துமே உடலால் நமக்கு கொடுக்கப்படும் சமிஞ்ஞைகள்.எனவே நாமே நமக்கு ஒத்துவராத உணவுகளை தவிர்த்து அல்லது என்றாவது ஒருநாள் மட்டும் சாப்பிட்டு பழகுவது நல்லது.

ஆதலால் இதை தவிர்ப்பதன் மூலம் நாம் நம் உடலுக்கு வேலை பளுவை குறைக்கிறோம் .கீரை ,தயிர் ,வெங்காயம் (பச்சையாக) ஆகியவற்றை இரவில் எடுத்துக்கொள்ள கூடாது .இவை அனைத்தும் செரிப்பதற்கு மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளும்.இரவு உணவை முடிந்த மட்டும் சீக்கிரம் எடுத்துக்கொள்வது நல்லது ,ஏனெனில் நாம் சாப்பிட்ட உடன் நமது உணவு செரிக்க சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும்.நாம் சாப்பிட்ட உடன் உறங்க சென்று விட்டால் ,நாம் சாப்பிட்ட உணவு அனைத்தும் கொழுப்பாக மாறி உடலில் சேரும். இரவு உணவிற்கும் ,படுக்கைக்கு செல்லுவதற்கும் குறைந்தது இரண்டு மணி நேரம் இடைவெளி கண்டிப்பாக தேவை.இதை நீங்களே ஒரு சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம் .

:::சூடான இட்லி::: 
வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் காலை எழுந்திருக்கும் போது நீங்கள் உடல் அலுப்பு /வலி யை உணருவீர்கள். ஒரு நாள் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரம் கழித்து படுத்து,அடுத்த நாள் காலை பாருங்கள் !கண்டிப்பாக உடல் வலி இருக்காது .இரவு உணவு உண்ணும் காலம் தவறும்போது, பழம் ,பால் ஆகியவற்றை உண்ணுவது உகந்தது .பழங்களின் செரிமான நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே .

நாம் இரவு உணவாக இட்லி ,இடியாப்பம் மற்றும் வேக வைத்த உணவுகளான அரிசி உப்மா,நீர்க்கொழுக்கட்டை,பழ கலவை (Fruit Salad ) போன்றவற்றை அருந்துவது நல்லது.

அடுத்து நெகடிவ் கலோரி food .அது என்னங்க நெகடிவ் கலோரி ?
எந்த ஒரு உணவு தான் கொடுக்கும் கலோரிகளை விட ,அதிகமான கலோரிகளை எடுத்துக்கொண்டு செரிக்கிறதோ அதுதான் நெகடிவ் கலோரி உணவாகும்.
சில நெகடிவ் கலோரி உணவு வகைகள் .....
                                                             

  1.       Celery
  2.       Oranges
  3.       Strawberries
  4.       Tangerines
  5.       Grapefruit
  6.       Carrots
  7.       Apricots
  8.       Lettuce
  9.       Tomatoes
  10.   Cucumbers
  11.   Watermelon
  12.   Cauliflower
  13.   Apples
  14.   Hot Chili Peppers
  15.   Zucchini  

  தொடரும்....

  


செவ்வாய், 10 ஏப்ரல், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 5

பகுதி 5:-

புகைப்படத்தை பார்த்தவுடன் நல்ல பசியுடன் இருப்பவர்களுக்கு ஒரு கட்டு கட்டலாம் என்று தோணும் .நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் உணவு வகைகளை நமக்கு சொல்லி தந்துள்ளார்கள் பாருங்கள்.

சரி விடயத்திற்கு வருகிறேன்.அரிசியை பொறுத்த வரை நாம் சமைத்த பின் உள்ள அளவையே அதாவது எடையை வைத்தே கணக்கிடுவது நல்லது .

அரிசியானது அதன் தரத்தின்படி கலோரிகள் மாறிவரும்.அதாவது வெள்ளை அரிசிக்கும் ,சிகப்பு அரிசிக்கும் கலோரிகள் மாறும்.

ஒரு கிராம் சமைத்த வெள்ளை அரிசியில்1 .3 கிராம் கலோரிகள் உள்ளது.நாம் 500 கிராம் எடையுள்ள சமைத்த அரிசியை உண்டால் 650 கலோரிகள் அதிலிருந்து கிடைக்கும் அதில் 45 சதவிகிதம் மாவுச்சத்து உள்ளது.  மேலும் சமைத்த அரிசியில் அதாவது சோற்றில் ,நாம் மேலும் ஏதாவது சேர்த்தால் அதன் கலோரிகள் ஏறிக்கொண்டே போகும்.(அதாங்க கலந்த சாதம்னு சொல்லப்படும் தேங்காய் சாதம் ,தக்காளி சாதம் ....)

இதே போல் ஒவ்வொரு உணவிற்கும் அடிப்படை கலோரிகள் உண்டு அதனுடன் நாம் சேர்க்கும் பொருளுக்கு தக்க அதன் கலோரிகள் மாறும் .சில நாட்கள் நீங்கள் கணக்கிட்டு வந்தாலே தெரிந்து விடும்.

நாம் தினமும் உண்ணும் சில உணவிற்கு கலோரிகள் கீழே கொடுத்துள்ளேன் .மேலும் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும் .

தேநீர் - (100 மி.லி)-75கலோரிகள்
(50 மி.லி பால் ,20 கி சர்க்கரை,தேயிலை ,தண்ணீர் )
குளம்பி - (100 மி .லி )-120 கலோரிகள்
இட்லி ஒன்றுக்கு (மீடியம் சைஸ்)-75 கலோரிகள் .
தோசை ஒன்றுக்கு(மீடியம் சைஸ்)-150 கலோரிகள்.  
(எண்ணெய் குறைவாக )
ஒரு தேக்கரண்டி ந .எண்ணெய் - 35 கலோரிகள்.
பொடி ஒரு தேக்கரண்டி-70 கலோரிகள்.
சப்பாத்தி ஒன்று(மீடியம் சைஸ்)-75 கலோரிகள் .
(புல்கா )
ரவை உப்மா 1 கப் - 300 கலோரிகள்
நெய் பொங்கல் 1 கப்-350 கலோரிகள்
தேங்காய் சட்னி 1 கரண்டி - 150 கலோரிகள்
சாம்பார் 1 கப் - 150 கலோரிகள்

இனிப்பு வகையறாக்களுக்கு கலோரிகள் மிக அதிகம் அதனால் கொஞ்சம் பார்த்து எடுத்துக்கொள்வது நல்லது.
    
இதையெல்லாம் நான் எழதுவது உங்களை பயமுறுத்த அல்ல.நாம் எடுத்துக்கொள்ளும் உணவே நம்மை நோய்க்கு தள்ளாமல் இருக்கவே ... 
இந்த வேகமான உலகில்,கண்டிப்பாக நம் உடலை நாம் பேணி பாதுகாத்து கொள்ள வேண்டும்.உடல் நன்றாக இருக்கும் வரைதான் நம்மால் உழைக்க முடியும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
என்னங்க ..நான் வெஜ் அயிட்டம் பற்றி ஒன்றும் போடலையே ?... என்று கேட்பது புரிகிறது ...

முடிந்த அளவு நான் வெஜ் எனப்படும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது .அது நம் உடலுக்கு கொடுக்கும் வேலை என்பது மிக அதிகம் அது மட்டும் அல்லாமல் அதிக சத்துக்களை உள்ளடக்கியது .15 நாட்களுக்கு ஒரு முறை என்பது போதுமானது.  


தொடரும்...


ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 4


பகுதி 4 :-

இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் கூகுள் ஆண்டவர் உதவியுடன் கலோரி விவரத்தை தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் ,கொஞ்சம் கொஞ்சமாக குறித்துக்கொள்ளவும்.

பொதுவாக கலோரியை நாம் கடையில் வாங்கும் பொருட்களில் இருந்து தெரிந்து கொள்ள அதன் உறையின்மீது எழுதிருக்கும் விவரங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு நீங்கள் மேரி ரொட்டி வாங்குகிறீர்கள் என்றால் ,அதன் உறையில் Nutrition Info : என்று எழுதி 100 கிராமுக்கு 459 Kcls என்று குறித்திருக்கும். அந்த உறையில் மொத்தம் 160 கிராம் எடை என்றால்
 (1 .6 X 459 ) / No of Biscuts . 

இதைப்போலவே அடைத்து விற்கப்படும் பொருட்கள் அனைத்திற்கும் கலோரிகளை நாம் எளிதாக கண்டு பிடிக்கலாம். பொதுவாக Packed Foods உடலுக்கு நல்லதல்ல.


பொதுவாக நமது எடையை அதிகம் கூட்டுவது யார் தெரியுமா? 
நமது பரம்பரை சொத்து அரிசிதான்.
காரணம் ???
அரிசி பிடித்த உணவு மட்டுமல்ல ...நம் பழக்கமும் ஒரு காரணம்...
எப்படி???
நாம் சாப்பாடு என்று ஆரம்பித்தால் சில பேர் பொடி/துவையல் என்று ஆரம்பித்து சாம்பார் ,காரக்கொழம்பு/வத்தல் குழம்பு, ரசம் ,மோர் ,அப்பளம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்..அதனால் தான் மருத்துவர்கள் அரிசியை விட்டுவிட்டு ,கோதுமை ,ஒட்ஸ்,கார்ன் flakes ,என்று நாம் அதிகம் விரும்பாத/உண்ணாத பொருட்களை சாப்பிட பழக சொல்கிறார்கள். ஏனென்றால் நாம் எடுத்துக்கொள்ளும் அளவு குறையும் என்பதால் .

உண்மை என்னவெனில் அரிசியை போலே ஓட்ஸ் ,கோதுமை போன்றவற்றின் கலோரி அளவு எல்லாம் சற்றே ஒன்றுதான்.

நிறைய பேருக்கு தோன்றும் என்னடா இது ? இவன் எதை சாப்பிட சொல்லப்போகிறான் ..கலோரி பற்றியே எழுதி வருகிறான் என்று...

நாம் உணவு பழக்கத்தை ஆரம்பிக்கும் முன்பு அனைத்தையும் முழுமையாக தெரிந்து கொள்வது மிக அவசியம்.அதனால்தான் நான் கலோரியைப்பற்றி இன்னும் இரண்டு/மூன்று தொடர்கள் எழுதிவிட்டு பிறகு மாதிரி அட்டவணை ஒத்துக்கொள்ளும் ,ஒத்துக்கொள்ளாத உணவு போன்றவற்றை எழுதுகிறேன் அதுவரை கலோரி என்ற அடிப்படையை தெரிந்து கொள்வோம்..

தொடரும்...