வெள்ளி, 8 ஜூன், 2012

::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 3

பகுதி 3:‍-


பாஸை அனுப்பிவிட்டு காத்திருந்த எனக்கு,மீண்டும் ஒரு காஃபி வந்தது.சிறிது நேரத்தில் அவருடன் நடிக்கும் அடிப்பொடிகள் எல்லாம் வந்துசேர,சிறிது நேரம் கழித்து அந்த சிங்கமான துணை நடிகரும் வந்தார். எல்லாம் ஒன்று கூடியவுடன் ஃபாரின் மருந்தை எங்கிருந்தோ கொண்டுவந்தார்கள்.
நம்ம சிரிப்பு நடிகருக்கு ஊற்றி கொடுத்து,அவர்களும் சாப்பிட்டார்கள்.சிரிப்பு என்னைப்பார்த்து அண்ணே சாப்பிடுங்க என்றார். தேங்ஸ் அண்ணே நமக்கு பழக்கமில்லைன்னு சொல்ல.

சிறிது நேரத்தில் உள்ளே போன மருந்து வேலை செய்ய ஆரமிபித்தது. நான் செக் வாங்குவதிலேயே ,குறியாக இருக்க,அவரோ கொஞ்சம் கொஞ்சமாக மருந்துக்கு கட்டுப்பட ஆரம்பித்தார். யாரோ விவேகமான நடிகரைப் பற்றி எடுத்துவிட உச்சஸ்தாயில் விவேகமான‌வருக்கு அர்ச்சனை நடந்தது.

எனக்கோ இவரை முடித்து விட்டு மீதி பிஸினஸை பார்க்க வேண்டும் என்ற முனைப்பு,அண்ணே செக் என்றேன்.கவலப்படாதீங்க உங்க கம்பெனிய ஏமாத்திட முடியுமான்னார்?
( நான் வேலை பார்த்த அந்த நிறுவனம் அரசாங்க ரீதியாகவும்,அரசியல் ரீதியிலும் நல்ல பின்புலம் உடையது)காந்திய‌ பேங்குல டெபாசிட் பண்ணிட்டு வந்து தருவாங்கன்னார்.சரி நம்மளும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம் என உட்கார்ந்தேன்.

அப்போது பேச்சு கொடுத்த அவர், ஏண்ணே நீங்க விலை எப்படி குறைவா தந்திருக்கீங்கன்னார். நான் அதுக்கு தான், உங்க பி.ஆர்.ஒ ல்லாம் எங்களுக்கு பிஸினஸ் தந்திருக்காங்க என்றேன். போன தடவை சூட்டிங் போகும்போது போனப்ப 2 ரூவா கூட வாங்கனாங்க.எல்லாம் நம்ம பயல்கள் ஏற்பாடு பண்ணினது என்றார்.கூடவே நம்ம பசங்க கமிசன் அடிச்சிருப்பாங்க போல என்றவர்..."போயிட்டு போறாங்க,கடவுள் நமக்கு கொடுக்கிறார்",அவிய்ங்க கொஞசம் சாப்பிட்டு போறதுல என்ன வரப்போகுது என்றார்.

பரவாயில்லை,அவருக்குள்ளும் ஒரு நல்ல எண்ணம் இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.ஒரு வழியாக 2 மணி நேரம் காத்திருந்து செக்கை வாங்கினேன்.மருந்து உள்ளே இருந்ததால்,ரொம்ப சிரமப்பட்டு செக்கில் கையெழுத்து போட்டார்.ஒரு வழியாக நன்றி சொன்னேன். அண்ணே பேர ஞாபகத்தில வச்சிக்குங்க என்றேன்.சரின்னு சொன்னவர்.ஊருக்கு போய்ட்டு வந்து கூப்பிடறேன்,மீதி கரன்ஸி இருந்தா மாத்தி கொடுங்கன்னார்.

அதற்குள் வரிசையாக பல நடிகர்,நடிகைகளின் மேனேஜர்கள் போன் செய்ய ஆரம்பித்தனர்.

பொதுவாக டி.நகரில் உள்ள அந்த சங்க அலுவலத்தில்(இப்போது இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டபடுகிறது) ஒய்வு கிடைக்கும் போது மற்றும் மாலை நேரங்களில் முக்கிய நடிகர், சில நடிகையர்கள் அங்கு வருவர். அங்கே ஒரு கலையரங்கம்,ஒரு சின்ன ஸ்டுடியோ,ஒரு கேண்டீன்,அதில்லாமல் உள்ளே நுழையும்போதே ஒரு அலுவலகமும்,இடது புறம் ஒரு பெரிய அலுவலகம் மற்றும் முதல் மாடியில் ஒரு அலுவலகமும் இருக்கும்.கீழே உள்ள அலுவலகத்தில்தான் சங்க தலைவர் அறை உள்ளது.

பிஸினஸுக்காக அலைந்து,அலைந்து அங்குள்ள வாட்ச்மேன் முதல் நான்கைந்து நபர்கள் அறிமுகமானார்கள்.எனக்கு யார் வந்து செல்லுகிறார்கள் என்று தகவல் தரும் சோர்ஸ்ம் அவர்கள்தான்.

ஒரு புறம் எல்லாரிடமும் தொடர்பிலிருக்க,மறுபுறம் என் டீமுடன் கோ-ஆர்டினேட் செய்து,வெளிநாட்டு கரன்ஸி,டிராவலர்ஸ்செக்குகளை ஏற்பாடு செய்து வந்தேன்.என்னுடைய முழு நேர அலுவலகமாகிப்போனது அந்த இடம்.

அன்று மாலை,அந்த வாட்ச்மேனிடம் அவரை டீ குடித்து விட்டு,எனக்கொரு டீ வாங்கிவர கேண்டீனுக்கு அனுப்பினேன்.அப்போது ஒரே ஹாரன் சத்தம்.போன வாட்ச்மேன் தலைதெறிக்க ஓடி வந்தார்.என்ன என்று நான் எட்டி பார்க்க. அப்போது நான் கண்டது என் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது.சே...இவ்வளவு மோசமாகவா நடந்து கொள்வார் இவர் என எண்ணத்தோன்றியது..

அப்படி நடந்து கொண்டவர் யார் தெரியுமா?...சின்ன க்ளூ..

இந்த "சின்ன" தான் க்ளூவே..!!!!

தொடரும்....

5 கருத்துகள்:

::: வணக்கம் :::

உங்கள் வருகைக்கு நன்றி !!!

ஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.

அன்புடன்

ஆரூரான்