திங்கள், 23 ஜூலை, 2012

:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8

பகுதி 8:-

நாம் அடுத்ததாக பார்க்கப்போவது யாரைப்பற்றி தெரியுமா?...

அடுத்ததாக நான்இருவரைப்பற்றி எழுதபோகிறேன்.அதில் ஒருவர் சினிமாத்துறைக்கு சம்பந்தமில்லாத நபர் வெளிநாட்டில் கலைநிகழ்ச்சிக்கு நடிகர்,நடிகைகள் எல்லாரும் போகும்போது,சினிமாத்துறைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு நபர் சென்று வருவார்.மற்றொருவர்…விவரம் கீழே…என்னங்க இது நடிகர்களின் நிஜ முகங்கள்ன்னு பேர் வச்சிட்டு வேற யாரையோப்பற்றி எழுதப்போறீங்க என்று கேட்பது புரிகிறது...

ஆனா இது போன்ற நபர்களை நீங்களும் தெரிஞ்சிக்கனுமே அதுக்குதான்.

நான் குறிப்பிடும் இவர் ஒரு பல முகங்களை கொண்டவர்.இவர் பேர் இனிஷியலே ரொம்ப குளிர்ச்சியாகத்தான் இருக்கும்.பகுதி நேர அரசியல்வாதி.அதாங்கதேர்தல் வரும்போது கட்சி கூட்டம் நடத்துவார்.அடுத்த கூட்டம் அடுத்த தேர்தலுக்குதான்.சொந்தமா ஹோட்டல்,அப்புறம் மெடிக்கல் காலேஜ் எல்லாம் இருக்கு..கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி இவங்க காலேஜ கூட அம்மா ஆட்சியில இடிச்சிட்டாங்க..இப்போ யாருன்னு தெரிஞ்சிருக்கும்...

அப்போது அவர்களுக்கு நார்த் ஃபோக் சாலையில் ஒரு அலுவலகம் இருந்தது.அங்குதான் அவரை சந்திக்க சென்றேன்.அப்போது அவ‌ரிடம் உங்களுக்கு எப்படி சார் சினிமா உலகத்துடன் தொடர்பு என்றேன்? அவர் சிரித்துக்கொண்டே.நமக்கு ரொம்ப நாளாக இவங்களோட தொடர்பிருக்கு,ஃபாரின் போகும்போதெல்லாம் நம்மள கூப்பிட்டு விடுவாங்க என்ற அவர் பதில் எனக்கு திருப்தியளிக்காத்தால் யார் சார் கூப்பிட்டு விடுவாங்க என நான் கேள்வியாக கேட்க...அவர் என் கேள்விக்கு சாமார்த்தியமாக சிரிப்பையே பதிலாக தந்தார்.ஆனால் என்ன "கலைச்சேவை" செய்ய போகிறார் என்று சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும்..

அடுத்து நான் சந்தித்தது இன்று மிகப்பெரும் அரசியல் தலைவராக இருக்கிற மாலுமி நடிகர்.நான் அவரை முத‌லில் சந்தித்தது நடிகர் சங்கத்தில்தான்.அப்போது உடல் எடை கம்மியாக நன்றாக இருந்தார் கட்சி ஆரம்பிப்பதைப்பற்றி ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன.அவரைச்சுற்றி எப்போது நான்கைந்து பேர் என கம்பீரமாக ஆனால் எளிமையாக இருந்தார்.உட்காருங்க சார் என்றார்.ஒரு பொறுப்பான தலைவருக்குரிய அனைத்து தகுதிகளுமே அவரிடமிருந்ததை என்னால் உணர முடிந்தது.நிறைய நேரம் பேசினோம்.

அவருடைய நண்பருடன் அவர் சேர்ந்து நடத்திய ஃபிலிம் புரொடக்சன் அலுவலகம் 100 அடி சாலையில் இயங்கி வந்தது.அப்போது அது உதவி இயக்குனர்களின் கூடாரம் என்றே சொல்லலாம்.நிறைய பேருக்கு உதவி செய்வதை நான் கண்ணால் கண்டிருக்கிறேன்.அது மட்டுமல்லாது,நடிகர் சங்கத்தின் கடனை அடைத்து,அதன் மதிப்பையும் உயரச்செய்தவர்.அவ‌ருக்கு அப்போது மது பழக்கம் இருந்தது ஆனால் அவர் அதற்கு அடிமையில்லை. ஆனால் இன்று அவருக்கு இருக்கும் மது பழக்கம் எப்படி அவரை ஆட்கொண்டது என எனக்கு புரியாத புதிராக இருக்கிறது.

பழகிய நாட்களில் நன்றாகவே பழகினார்.மேலும் அனைவரிடமும் மரியாதையாகவே நடந்து கொண்டார்.என்னுடைய பிசினஸ் பற்றி பேச,நான் தான் ஏற்பாடு பண்றேன் அதனால எங்க ஆளுங்க பார்த்துப்பாங்க என்றார்.நிகழ்ச்சியில் யார் யாரை கலந்துகொள்ள அனுமதிப்பது என்ற முடிவை எடுக்க அவ்ருக்கே அதிகாரம் வழ்ங்கப்பட்டிருந்தது.அவ்வாறு கலந்து கொள்பவர்களுக்கு அவர்களின் மார்க்கெட்டுக்கு தகுந்த மாதிரி சகுமானம் இந்திய ரூபாயில் சங்கத்திலேயே வைத்து கொடுக்கப்பட்டது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதில் மிக அக்கறையாக ,வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் நடிகர்களை அதிகம் தேர்ந்தெடுத்தார்.அவரின் அந்த குணம் என்னை இன்று வரை என்னால் மறக்க இயலவில்லை.என்ன காரணத்தினாலோ அவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அது மட்டுமில்லை என்றால் அவருக்கு தலைமை தாங்கும் தகுதி இருப்பதை யாரும் மறுக்க இயலாது...

தொடரும்... 
வியாழன், 5 ஜூலை, 2012

::: நடிகர்களின் நிஜமுகங்கள் ::: PART 7பகுதி 7:‍ -

வேலைப்பளுவின் காரணமாக சற்றே இடைவெளி...


"கோபால்" அக்காவிடம் அதாங்க அந்த மயிலாட மேடத்திடம் அவர் தோழிகள் எவ்வளவு எடுத்து செல்கிறார்கள் என்பதை ஒன்று விடாமல் கூற நான் அவனைப்பார்த்து முறைத்தேன்.அதை கண்டுகொள்ளாத அவன் காரியத்தில் கண்ணாயிருந்தான்.பயிற்சி முடிந்து அனைவரும் வெளியேற எங்களிடம் மனம் விட்டு பேசினார் அவர்.ஏழ்மையான குடும்பத்தில் ஏழு பெண்களில் ஒருவராக பிறந்து சினேகமான நடிகையின் தம்பியை மணந்து,பிறகு மணமுறிவு ஏற்பட்டு,தற்போது இரண்டாவது கணவருடன் வசித்து வருகிறார் மிக சிறிய வயதில் இண்டஸ்ட்ரியில் நுழைந்த அவர்,ஒரு பிரபலமான நடனக்கலைஞரிடம் உத‌வியாளராக சேர்ந்தார்.அந்த மேடம் இண்டஸ்ட்ரியில் சிறு வயதில் நுழையும்போது தான் பட்ட கஷ்டத்தையெல்லாம் விலாவாரியாக கூறினார்...

நன்றி சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.கோபாலிடம் தான் வெளிநாடு சென்று வந்தவுடன் அழைப்பதாக கூறினார்.அதைப்போலவெ திரும்பி வரும்போது அவனுக்கு ஒரு சென்ட் வாங்கி வந்து அன்பளிப்பாக கொடுத்தார்.ஆனால் சும்மா சொல்லக்ககூடாது அந்த‌ அளவுக்கு அவன் நட்பு வளர்த்திருந்தான்..

அடுத்து நான் பார்க்க சென்றது...அடுக்கு மொழியில் வசனம் பேசும் அந்த இயக்குனர் கம் நடிகரின் மகனை...யாரென்று தெரிகிறதா?அந்த நம்பர் நடிகையின் முதல்!? காதலர்.(நம்பர் கூடிக்கொண்டே போவதால் சீனியாரிட்டி பிரகாரம் சொன்னேங்க).தி.நகரில் உள்ள அவரது இல்லத்தின் வர‌ந்தாவில் அவரது தந்தையின் வெள்ளிவிழா படங்களின் ஷீல்டுகள் ஆக்கிரமித்து இருந்தது.அந்த நடிகரின் தாயார்தான் குடும்பம்,அலுவலகம் என அனைத்தையும் கவனித்துக்கொள்கிறார்.அவரின் பள்ளி தோழிதான் அவருக்கு உதவியாளர்.என்னிடம் ஃபோனில் பேசியது நடிகரின் தாயார்தான்.என்னுடைய சொந்த ஊருக்கு அருகில்தான் நடிகரின் தந்தையாரின் ஊர் என்பதால்,அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் என்னில் மிகுந்திருந்தது.

சிறிது நேரத்தில் சூடான ஃபில்டர் காஃபி வந்தது.அந்த அலுவலக உதவியாளரிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது அந்த நடிகர் வந்தார்.1984ம் ஆண்டு பிறந்த அவருக்கு வயது,அனுபவம் எல்லாம் குறைவு.ஆனால் சினிமாவில் மிகுந்த ஆர்வம்.அவரது தந்தை குறைந்த வயதிலேயே அவருக்கு நிறைய விடயங்களை பயிற்றுவித்திருந்தார்.கார் ஓட்டுவதிலும் ஆர்வம் அதிகம் உள்ள அந்த நடிகர்,அப்போது இரண்டு கார்களை வைத்திருந்தார்.ஆனால் வீட்டில் மிகுந்த கட்டுப்பாடு.சில விடயங்கள் எனக்கு ஆச்ச‌ர்யத்தை த‌ந்தது.

அவரது வீட்டில் நிறைய வேலயாட்கள்,உத‌வியாளர்கள் என எப்போதுமே கூட்டம். அந்த சம‌யத்தில் ஒன்றிரண்டு படமே நடித்திருந்தார்.வெளியில் கிளம்பிக்கொண்டிருந்த அவரை அவரது அம்மாவின் பள்ளி தோழியான அந்த அலுவலக உதவியாளர் அறிமுகப்படுத்தி வைத்தார்.அவருடனான எனது வேலைகளை முடித்துக்கொண்ட நான்,அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.அப்போது வெளியில் செல்லும் அவ‌ருக்கு,ஐந்தாறு நூறு ரூபாய்கள் கொடுக்கப்பட்டது..அதை வாங்கிகொண்ட அவர்,என்னிடம் இந்த பாருங்க சார் இதே மாதிரி பன்றாங்க,சின்ன பிள்ளைக்கு பணம் கொடுப்பது போல கொடுக்கிறாங்க.இத வச்சிகிட்டு என்ன பண்றது.எனக்கு ஒரு கிரிடிட் கார்டு வாங்கி கொடுங்க என்று சொன்னார்.அப்படியே எனது நட்பை தக்க வைத்துக்கொண்டேன்..

பொதுவாக சினிமாத்துறையினர் சென்டிமென்டுக்கு பெயர் போனவர்கள். இவர்களும் அப்படித்தான்.நான் ஃபாரக்ஸ் கொடுத்த வருடம் நடிகருக்கு நிறைய படங்கள் புக் ஆகி சூட்டிங்கிற்காக வெளிநாடு தொடர்ந்து செல்ல அவரது தாயாருக்கு மிக்க மகிழ்ச்சி.அதனால் நான் அந்த நிறுவன‌த்தில் வேலை செய்கின்ற வரையில் என்னை மட்டுமே வரச்சொலுவார் அவரது தாயார்.

நான் பார்த்த வரையில் அந்த நடிகர் மீடியாக்கள் சொல்வது போல பெரிய ஃபிளே பாய் எல்லாம் கிடையாது.எல்லாரையும் போல் இளம் வயதிற்கான‌ ஈர்ப்பு அவருக்கும் இருந்திருக்கலாம்.காதல் திருமணம் செய்துகொண்ட இவரது பெற்றோர்,நம்பர் நடிகையுடன் இவருக்கு இருந்த காதலை ஒரளவு ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.ஆனால் காதலர் இருவரிடமும் பிரச்சனை வரக்காரணமான‌வர் உச்சத்தில் இருந்த‌ இருக்கின்ற அந்த சூப்பர் நடிகர்.

அதற்கு காரணம் அவ‌ரின் மகள்.அவருக்கு மன உளச்சலை அதிகம் ஏற்படுத்திய,ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அவர் மகளிடம் முதலில் மாட்டியதுஇந்த நடிகர்தான் ஆனால் இவர் தப்பித்துவிட,மாட்டிக்கொண்டது ஒல்லிபிச்சான் நடிகர்.ஆனால் தன் தவறை மறைக்க தன் அப்பாவிடம்,இவரைப்பற்றி ஏடாகூடமாக போட்டுக்கொடுக்க அவர்,தன்னோடு அப்போது நடித்த அந்த நம்பர் நடிகையிடம்,இந்த நடிகரைப்ப‌ற்றி சொல்ல .பெரிய நடிகரே இப்படி சொல்கிறாரே என அவ்ர் நம்பி இவரோடு சண்டை போட முறிந்தது இவர்கள் காதல்..

தொடரும்...