வெள்ளி, 30 மார்ச், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 3


Sweet Tea is very susceptible to diabetes

பகுதி 3 :-

ஆக நான் போன பகுதியில் சொல்லியபடி எழுதி பார்த்து வந்ததன் விளைவு ,நான் எவ்வளவு அதிகமாக சாப்பிடுகிறேன் என்று தெரியவந்தது...

முதலில் உணவு எடுத்துக்கொள்ளும் முறையை ஒழுங்குபடுத்தினேன்.வயிறு முட்ட சாப்பிடுவதை நிறுத்தினேன்.முக்கால் வயிறு நிரம்ப சாப்பிட்டால் போதுமானது.கொஞ்ச நாளைக்கு தேநீர் குடிப்பதை சற்று அதிகபடுத்தி கொண்டேன்.சற்றுபசிப்பது போல் இருந்தால் 2 மேரி ரொட்டி துண்டுகளை சாப்பிட்டு பழகினேன். சற்று பசிப்பது குறைந்தது .இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ,நாம் பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்க கூடாது ,ஏதாவது ஒரு உணவை எடுத்துகொள்ள வேண்டும்.குறைவாக எடுத்துக்கொள்ளவும்.  

இயற்கையாகவே கடவுள் நமக்கு உடம்பில் நமக்கு பல அற்புதங்களை கொடுத்துள்ளார்.நீங்கள் தினமும் காலை எழுந்திருக்கும் நேரத்தை மாற்றி 2 ,3 நாள் அலாரம் வைத்து எழுந்து பழகுங்கள் ..4 வது நாள் அலாரம் இல்லாமலே எழுந்து விடுவீர்கள் .அதிப்போலதான் உணவு உண்ணுவதும்.சுமார் 15
நாட்களில் பழகி விட்டது .

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால்.நாம் எடுத்துக்கொள்ளும் உணவு குறைந்த கலோரி உள்ள உணவாக இருக்க வேண்டும்.சரி.. ஒவ்வொரு உணவுக்கும் கலோரி கண்டு பிடிப்பது எப்படி என்பதையும் ,எது கலோரி அதிகம் உள்ள உணவு,குறைவாக உள்ள உணவு என்பதையும் ,அதோடு "நெகடிவ் கலோரி Food ",நல்ல ,கெட்ட கொழுப்பு பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக பழங்கள் /காய்கறிகள் இவையெல்லாம் குறைந்த கலோரி உள்ள நல்ல உணவுகள்..நீங்கள் அதில் மசாலா/எண்ணெய் சேர்க்கும் போதுதான் அதன் குணம் /தன்மை மாறி அதன் கலோரி அளவுகள் மாறுகிறது.நீங்கள் பழங்களை நறுக்கி அதில் தேன்,மிளகு பொடி சேர்த்து சாப்பிடலாம் .காய்கறிகளில் குறைந்த காரம் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

தொடரும்..... 

வியாழன், 29 மார்ச், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!!


பகுதி 2 :-

நாம் உண்ணும் உணவின் சத்துக்கள் கலோரிகளாக கணக்கிடப்படுகின்றன.
அந்த கலோரிகள்தான் நாம் செய்யும் வேலையை பொறுத்து உடலில் இருந்து எரிக்கபடுகின்றன.ஒரு சாதாரண ஆண்மகனுக்கு சுமார் 2300 கலோரிகள் வரை தினசரி தேவைப்படும்.அதுஅவர்கள் செய்கின்ற வேலை, சூழ்நிலையை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இதைத்தாண்டி நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் கலோரிகள் நமது உடலில்சேர்ந்து நமது எடையை
கூட்டிக்கொண்டே வரும்.


கிராமங்களில் பெரியவர்கள் உணவு பரிமாறும் போது,
"வளர்கின்ற வயசு நல்லா சாப்பிடு என்பார்கள் "

ஒவ்வொருமனிதனுக்கும் தனது 30 வயது (தோரயமாக)வரைஉடல்உறுப்புகள் வளர்ச்சி அடைந்து வரும் .ஒவ்வொரு மனிதனுக்கும் அதுமாறுபடும்.அதனால் அதுவரை அதிகமாக உண்ணப்படும் உணவின் சத்துக்கள் உடல் வளர்ச்சிக்கு உதவும் .30 வயதை கடந்தவுடன் ,நமது உணவை நாம் பார்த்து /கணக்கிட்டு சாப்பிடுவது மிக அவசியம்."எல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கு,சாத்தியமா? என்று கேட்பது புரிகிறது ".கண்டிப்பாக சாத்தியம்.

இப்போது நான் என்ன செய்தேன் என்பதை கூறுகிறேன்.

முதலில் எனது உடல் எடையை கணக்கிட்டேன்,பிறகு இடுப்பு,மார்பு,தொடை பகுதி அனைத்தையும் இன்ச் இல் கணக்கிட்டு,ஒரு "எச்செல்" fileஇல்storeசெய்தேன்.
அந்த மருத்துவர் எனக்கு சொன்னது 22 கிலோ குறைக்க வேண்டும்என்று.
ஆதலால்,முதலில் எவ்வளவு கலோரி ஒரு கிலோ என்று கண்டறிந்தேன்.

1 கிலோ = 7700 கலோரிகள் . ஆக 22 கிலோவிற்கு 1,69,400 கலோரிகளை நான் எரித்தாக வேண்டும். பெரிய்ய்ய்ய ....முயற்சிதான் .ஆகட்டும் ஒரு கை பார்த்து விடுவோம் என்று முடிவு செய்தேன் ...

அஹோபிலம்


கடந்த வருடம் எனது நண்பர்களுடம் அஹோபிலம் சென்று வந்தேன்.தெரிந்த நண்பர் ஒருவரிடம் அவரது மகிழுந்தை இரவல் பெற்று ,சென்று வந்தோம் ..மறக்க முடியாத பயணம் அது...

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!!

பகுதி 1

நான் மருத்துவன் இல்லை ..எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான் 
  
இன்றைய வேகமான உலகில் நாம் யாரும் நம் உடலை சரியாக கவனிப்பது இல்லை ..மங்காத்தா படத்தில் வருமே "Money Money .."  என்று அதைதான் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

நான் கடந்த 2010 ஆம் ஆண்டு சுமார் 90 கிலோ எடையிருந்தேன்...உடல் எடையை எப்படியாவது குறைத்தே ஆகவேண்டும் என்னும் எண்ணத்தில் தனியார் உடற்பயிர்ச்சி கூடத்தை அணுகினேன் .

அவர்கள் என்னை முதலில் அவர்களது மருத்துவரை பார்க்க வேண்டும் என்றார்கள் .அதன்படி அவரை சந்தித்தேன்.கூடவே பயிற்சியாளரும் இருந்தார்.அவர் என் உடலின் எடை ,உயரம் ,இடுப்பு சுற்றளவு ,மார்பு சுற்றளவு ,அனைத்தையும் குறித்துக்கொண்டார்.பின்னர் அவர் என்னிடம், எனது எடை 68  கிலோ தன இருக்க வேண்டும் என்றும் நான் 22 கிலோ அதிகமாக இருப்பதாக கூறினார் .

அதை குறைக்க சுமார் 3 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லி, முதல் வருடத்திற்கு ரூ . 46 ,௦௦௦/-ம், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு ,வருடத்திற்கு ரூ.28,௦௦௦/-ம் செலவாகும் என்றார் .எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

என்ன செய்வது ..உடனே உதவிக்கு வந்தார் கூகுள் ஆண்டவர் .தேடினேன்.. தேடினேன்..உடல் எடை குறைப்பதற்கான அனைத்து விவரங்களையும் சேகரித்தேன் .

அப்போதுதான் என் சின்ன வயதில் எனது பெற்றோர் எனக்கு சொல்லிய விடயங்கள் ஞாபகத்துக்கு வந்தது..எனது அம்மா ஒவ்வொரு முறை உணவு பரிமாறும் போதும்,அந்த உணவில் உள்ள சத்துக்களை சொல்வார்.     

என்ன செய்வது காலம் போன பிறகுதான் ஞானம் வரும் என்பார்கள் ..அது சரிதான் ..விடயத்திற்கு வருகிறேன்..  


ஞாயிறு, 25 மார்ச், 2012

::: தமிழர்களும் ஆங்கில தொ(ல்)லைக்காட்சிகளும்:::

CNN-IBN

இந்தியாவில் ஏராளமான செய்மதி தொலைக்காட்சிகள்  பெருகி விட்டன..அவற்றில் சில மட்டுமே நடுநிலையை கடை பிடிக்கின்றன ...

ஒவ்வொருமுறை   தமிழர் சம்பந்தமான பிரச்சனை வரும்பொழுதும் தொடர்ந்து தமிழருக்கு எதிரான போக்கையே கடைபிடிக்கின்றன ..

முல்லை பெரியாராக இருக்கட்டும் அல்லது காவிரி பிரச்சனையாக இருக்கட்டும் ,நமக்கு ஆதரவாக குரல் கொடுக்க எந்த ஆங்கில ஊடகமும் இல்லை.

தமிழ் என்று பேசினால் "ப்ரோ tamils " என்று கூறுவார்கள் . எந்த ஆங்கில செய்தி ஆசிரியரும் தமிழைப்பற்றியும் ,தமிழர் வரலாறு பற்றியும் ஒன்றும் தெரியாதவராக இருப்பார் .

என்னை மிகவும் பாதித்தது ,இலங்கையில் உச்சகட்ட போரின்போது ,இந்திய அரசின் ஊதுகோலாகவே ஆங்கில ஊடகங்கள் செய்தி (அதாங்க  சிங்கள அரசுக்கு ஆதரவாக)ஒளிபரப்பின ...

போர் முடிந்த பிறகு சென்னையில் இவர்கள் பேட்டியெடுத்தது யாரிடம் தெரியுமா ???வெளி மாநிலத்திலிருந்து இங்கு வந்து தங்கியிருப்பவர்களிடம் ...

அவர்களுக்கு தமிழைப்பற்றியும் ,தமிழர் வரலாறு பற்றியும் என்ன தெரியும் ...

பெரிய கொடுமை ..வெட்ககேடு...???   பேட்டிஎடுத்ததும் தமிழன் இல்லை ...