சனி, 16 ஜூன், 2012

சோற்றிற்கு திண்டாட போகும் தமிழகம்!!!

இதைப்படிக்கும் நீங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால்,இந்த பிரச்சனையின் வீரியத்தை நன்றாக உணருவீர்கள்.

தஞ்சையிலிருந்து திருவாரூர்,நாகப்பட்டிணம்,கும்பகோணம்,மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ‍ மயிலாடுதுறை,திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் நீங்கள் பேருந்தில் பயணம் செய்தால் சாலையின் இருபுறமும் பச்சை பசேல் என காட்சியளிக்கும்..அதுவும் குறிப்பாக ஆகஸ்ட் முதல் மழைக்காலம் வரையில்..இயற்கையின் அழகை நீங்கள் கண்டு ரசிக்கலாம்..நான் மேலே குறிப்பிட்டதெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வரை...

ஆனால் இப்போதோ நிலமை தலைகீழ்...சாலையின் இருபுறங்களிலும்.."ஹைவே சிட்டி","கோல்டன் சிட்டி",டீரீம் சிட்டி என நிறைய சிட்டிக்களைத்தான் பார்க்க முடியும்..பச்சைபசேல் என்று இருந்த நெல்வயல்கள் இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காய்ந்து கிடக்கின்றன.மனிதன் பசிக்காக ஆதிகாலத்தில் விவசாயத்தைக் கண்டுபிடித்தான்.ஆனால் இப்போது அதனை பணத்திற்காக அழித்து வருகிறான்.

கிராமங்களில் சில ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் எல்லாரும் விவசாயத்தின் வருமானம் போதாமலும்,பணத்திற்காகவும் கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட்  உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் அரசின் "உலகமயமாக்கம்" என்ற பொருளாதார கொள்கையால் அனைத்து மாநில விவசாயிகளும் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இந்த உலகமயமாக்கம்,தாராளமயமாக்கம் என்ற பெயரில் உலகத்தில் உள்ள பெரிய பணக்கார முதலைகளிடம் நம்மை அடகு வைப்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.இதில் அனைத்து தொழில்களும் பாதிக்க பட்டுள்ளன்.அதிகம் பாதித்திருப்பது விவசாயியும்,விவசாயமும்.கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் விவசாயத்தை விட்டு விலகியிருக்கிறது.


புதிதுபுதிதாக தொடங்கப்பட்ட மனை விற்பனை நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டு கொண்டு நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்து,விவசாய நிலத்தை கூறுபோட்டு விற்பனை செய்து கொண்டிருக்கிறது.நல்ல காற்றாட்டம், தண்ணர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில்தான் மக்கள் வீடுகட்ட‌ விரும்புவர்.இதை பயன்படுத்திதான் ரியல் எஸ்டேட்உரிமையாளர்கள் வயல்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதில் மண் நிரப்பி பிளாட்டுகளாக பிரித்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.பிற நிலங்கைள விட வயல்களை பிளாட் ஆக்குவதால் 100 மடங்கு வைர லாபம் கிடைக்கிறது.விவசாயத்தில் பல சிரமங்கள் உள்ளதால் விவசாயிகளும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விலைக்கு கொடுத்து விடுகின்றனர்.


தமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தின் நெல் தேவையை 75 சதவிகிதம் பூர்த்தி செய்யும் அளவுக்கு வயல்கள் இருந்தன. ஆனால் இன்று 25 சதவகித தேவைய கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில், வெளிமாநிலங்கைள எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைக்கு பெரும்பாலான மாவட்டங்கள் தள்ளப்பட்டு விட்டன. இப்படி வயல் வெளிகள் வீட்டு மைனகளாக மாறுவதற்கு அரசியல்வாதிகளும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர்.

சிறிய மாநிலமான கேரளாவிலும் வயல்வெளிகளில் வீடுக‌ள் முளைக்க தொடங்கி இதே பிரச்சனை தலை தூக்கிய போது உடனெ விழித்தெழுந்த அப்போதய அச்சுதானந்தன் அரசு 2008ம் ஆண்டு "தண்ணீர் தடை பாதுகாப்பு சட்டம்" என்ற சட்டத்தை இய‌ற்றியது.இந்த சட்டம் மூலம்தண்ணீர் பாய்ந்து செல்லும் எந்த பூமியிலும், எந்த வயலிலும் வீடு கட்ட முடியாது.அதற்கு உள்ளாட்சியின் அனுமதி கிடைக்காது. இந்த சட்டத்தில் சில விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.அதாவது ஒருவருக்கு ஐந்து சென்ட் வயல் மட்டும் இருந்து, ஆனால் அவருக்கு வீடு இல்லையெனில், அப்படிப்பட்டவர் அந்த வயலில் வீடு கட்டலாம். அவ்வாறு கட்ட வேண்டுமெனில் அந்த வயலுக்கு உட்பட்ட தாலுகாவில் எங்கும் அவருக்கோ, அவரது மனைவிக்கோ, மகன், மகளுக்கோ வீடு இருக்க கூடாது. 

அவ்வாறு வீடு இல்லாமல்இருப்பதை அந்த பகுதி ஆர்.டி.ஓ. தைலைமயிலான கமிட்டி உறுதி செய்ய வேண்டும்.இந்த கமிட்டியில் உள்ளாட்சி மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் இந்த கமிட்டி கூடி எவருக்கும் வயல் வெளியில் வீடு கட்ட இதுவைர அனுமதி வழங்கியதில்லை.இந்த கமிட்டி வயல்வெளிகளில் வீடு கட்ட அனுமதி வழங்க கூடாது என்று கூறிவிவசாயிகள் சார்பில் கேரள ஐேகார்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதால்,வயல்வெளிகளில் வீடு என்பது கேரளாவில் நடக்காத காரியமாக மாறிவிட்டது.வயலை ஒட்டி உள்ள பகுதிகளில் பல நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தென்னை போன்ற மரங்கள் நட்டு வைத்திருப்பர். இதை "கைரபூமி" என்று அழைப்பது உண்டு.இங்கு வீடு கட்ட இந்த சட்டத்தில் வழிவைக செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த கைரபூமி கிராம ரிக்கார்டுகளில் வயல் என்று குறிப்பிட்டிருந்தால் அங்கும் வீடு கட்ட அனுமதி கிடைக்காது.இந்த சட்டம் காரணமாக கேரளாவில் ரியல் எஸ்டேட் வியாபாரம் வயல் வெளிகளுக்கு செல்லதாதால் அங்கு விவசாயம் காப்பாற்ப்பட்டுள்ளது. வீடுகள் மலைப்பிரேதசங்களிலும், காலி மனைககளில் மட்டுமே கட்டப்படுகிறது.


ஒரு நாட்டிற்கு இன்றியமையாதது அந்நாட்டின் உணவு உற்பத்தியே. அத்தகைய உணவு உற்பத்தியை இயற்கையாக பெற்றுள்ள நாடு நமது நாடு. அத்தகைய விவசாயத்தை பேணிக்காப்பது நமது கடமை. உணவு உற்பத்தி இல்லாமல் வேறு எந்த வளர்ச்சி இருந்தும் எந்த பயனும் இல்லை என்பது உண்மை.இதை தடுக்கஉடனடியாக கேரளாவைப்
போன்று தமிழ்நாட்டிலும் மிக கடுமையான‌ சட்டம் கொண்டு வர வேண்டும்.விவசாய நிலங்கள் எப்பொழுதும் விவசாய நிலங்களாக இருக்க வேண்டும்.விவசாய காரணங்களைத் தவிர, வேறு காரணங்களுக்காக விவசாய நிலத்தை விற்பனை செய்தால், அதை சார்பதிவாளர் தடுத்து நிறுத்த வேண்டும்.

விவசாயத்துக்கு தேவையான இடுபொருள், உரம், தண்ணீர், மின்சாரம் மிக  குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். விவசாயத் தொழிலை லாபகரமான தொழிலாக்குவதற்கு எந்த வகையில் எந்தெந்த பயிர்களை எப்படி சாகுபடி செய்ததால் உரிய லாபம் கிடைக்கும் என்பதை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏழை விவசாயிகளுக்கு எளிய வகையில் கடன் கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும். விவசாயத்துக்காக பெறப்படும் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும். விவசாயம் பாதுகாப்பு அரசின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொருவரின் கடமையுமாகும். உணவு என்பது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, நாளைய தலைமுறைக்கும் தேவை.கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.


இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.

இல்லையெனில் தமிழகம் உணவு தானியத்திற்கு கையேந்தும் நிலை வந்துவிடும்..



4 கருத்துகள்:

  1. இது அருமையான பதிவு பாலாஜி...சென்னையிலிருந்து ஊருக்கு காருல வரும்போது ரெண்டு பக்கமும் முன்பெல்லாம் ஒரே பச்சப் பசேல்னு இருக்கும் .இப்போ வீட்டு மனைகளா இருக்கு.பாக்கவே கஷ்டமா இருக்கு..

    பதிலளிநீக்கு

::: வணக்கம் :::

உங்கள் வருகைக்கு நன்றி !!!

ஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.

அன்புடன்

ஆரூரான்