பகுதி 6:-
கண்டிப்பாக நீங்கள் யாரென்று யூகித்திருப்பீர்கள். அந்த நேரத்தில் சினிமாவில் நல்ல உச்சத்தில் இருந்தார்.அப்போது ஷெனாய் நகரில் வசித்து வந்த அவருக்கு அப்பொழுதுதான் திருமணம் ஆகியிருந்தது. ஃபோனில் அழைத்த ஒரு நண்பனிடம் பேசுவதை போன்று பேசிய அவர்,தன்னுடய தேவைகளை கூறினார்.மறுநாள் காலை வரச்சொன்னார்.
பொதுவாக இந்த அளவுக்கு உச்சத்தில் உள்ள நடிகர்களுடன் நேரடியாக பேசுவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.ஆனால் அதற்கு நேர்மாறாக இருந்தார் அவர்.ஆனால் ஏனோ வெள்ளித்திரையில் மிளிர அவர் இன்று வரை போராடிக்கொண்டே இருக்கிறார்.
காலை சுமார் ஒன்பது மணியளவில் அவர் ஃபிளாட்டிற்கு சென்றேன்.என்னை வரவேற்ற அவரின் மனைவி,அவரது வீட்டின் வரவேற்பறையில் அமரச்செய்தார்.அவர் குளித்துக்கொண்டு இருக்கிறார் 10 நிமிடம் வெய்ட் பண்ணுங்க என்றார்.சரியென்று அன்றைய தினசரியை புரட்டிகொண்டிருந்தேன்,திடீரென்று யாரோ என் பெயரைச்சொல்லி அழைக்க,நான் சுற்றி பார்த்தேன். அப்போது அழைத்தது அந்த நடிகர் தான்.அவரின் வீட்டில் ஹாலோடு சேர்ந்து அமைந்திருந்த அந்த பாத்ரூமிலிருந்து தலையை வெளியே நீட்டி சாரி பாலாஜி கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன் என்றார்.சொன்ன படி சிறிது நேரத்தில் வந்த அவர்,தனது மனைவியை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.இஸ்லாம் மதத்தை சேர்ந்தவரான அவர் அதே மதத்தை பின்பற்றும் தனது நண்பியை காதலித்து மணம்புரிந்தவர்.
அவரிடம் பேசிக்கொண்டே,எனது வேலைகளை முடித்தேன்.உடனே என்னை காலை உணவு சாப்பிட அழைத்தார் நான் வேண்டாம் என்று மறுக்க பின் மனைவியிடம் ஜூஸ் கொண்டு வா என்று சொல்லிவிட்டு என்னிடம் தன்னுடைய அனுபவங்களை பகிரிந்து கொண்டே சாப்பிட்டார்.நானோ அவரை முதல் முதலாக அப்பொழுதுதான் சந்தித்தேன்,ஆனால் அவரின் பேச்சும்,நடந்து கொண்ட விதமும் என்னை மிகவும் நெகிழச்செய்தது.
தேங்ஸ் என்று சொல்லிவிட்டு,அங்கிருந்து கிளம்பிய நான் அடுத்து பார்க்க போனது மானையும் மயிலையும் ஆட்டி வைக்கிற அந்த மேடத்தை...
சௌத் ஃபோக் சாலையில் உள்ள அந்த நடன பயிற்சி கூடத்திற்கு எங்களை வரச்சொல்லியிருந்தார் அவர். அப்பொழுது மிகப்பிரபலமான காதல் ஜோடி அங்கு அமர்ந்திருந்தது.அது மார்க்கண்டேய நடிகரின் மகன் ஆவார்.அவர்கள் இருவரும் ஒரு ப்டத்தின் பாடல் பயிற்சிக்காக அங்கு வந்திருந்தனர்.20 வயது முதல் 30 வயது வரையுள்ள சுமார் அறுபது முதல் எழுபது பேர் அங்கு பல வித பயிற்சியில் இருந்தனர்.அந்த காதல் ஜோடி,தங்கள் பயிற்சியை விட காதல் குறும்புகளில் தான்அதிகம் நாட்டம் செலுத்தினர்.அவரிடமும் போய் பிசினஸ்பேசினோம்,அவரோ எல்லாவற்றையும் எங்கள் தயாரிப்பாளர் பார்த்துக்கொள்வார் என்று சொன்னார்.
சிறிது நேரத்தில் "அக்கா வர்றாங்க!!" "அக்கா வர்றாங்க!!" என்ற முணுமுனுப்பு கேட்டது.சிறிது நேரத்தில் அந்த மேடம் வந்தார்.அனைவரும் ஒவ்வொருவராக அவரது காலைத்தொட்டு வணங்கினர் அந்த காதல் "ஜோ"டி உட்பட.."குரு மரியாதையாம் அப்படி வணங்குவது.அவரது உதவியாளர் நாங்கள் வந்திருக்கும் விடயத்தை அவரிடம் கூற,அவர் எங்களைப் பார்த்து அருகில் வந்து அமருங்கள் என்றார்.
நாங்கள் விவரங்களைக்கூற,பொறுமையாக கேட்டுகொண்ட அவர்,நாங்கள் சுமார் 100 பேர் போறோம்.அதுல, 50 பேர் கிட்ட புதுசா வெளிநாடு டிராவல் பன்றாங்க அதனால,தயவுசெய்து நல்ல முறையில முடிச்சு கொடுங்க என்றார்.உடனே எல்லாரையும் அழைத்த அவர், "அப்பா எல்லாம் நல்லா கேட்டுக்கோங்க..இவங்க தான் நம்ம அஃபிசியல் ஏஜென்ட்ஸ்,எல்லாரும் இவங்ககிட்ட விவரம் கேட்டுக்கோங்க என்றார்.
நான் குறிப்பிட்ட அந்த மேடம் யாரென்று தெரிந்திருக்கும் உங்களுக்கு.அவர் நிறத்தில் சற்று கருப்பு என் கூட வந்திருந்த கோபாலும் கருப்பு,அவன் அவரை அக்கா என்று அழைக்க அவருக்கு உச்சி குளிர்ந்தது.அவர் என்னிடம் பேசுவதை விட அவனிடம் பேசுவதையே அவர் விரும்பினார். அவனும் கிளம்புகிற வரையில் அந்த "அக்கா" வை விட வில்லை.(நடுவில் என் காதில் கோபால்"சார் நாங்க ரெண்டு பேரும் ஒரே கலர்" அதான் அக்கா என்னிடம் நல்லா பேசுராங்க என விளக்கம் வேறு கொடுத்தான்.)சிறிது நேரம் கழித்து வெளிநாடு சம்பந்தமான சில விவரங்களை கேட்ட அவர், அவரின் தோழி நடிகைகள் எவ்வளவு வெளிநாட்டு பணம் எடுத்து செல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தார்.
தொடரும்...
NICE WRITING, KEEP ON POSTING
பதிலளிநீக்கு