பகுதி 3 :-
ஆக நான் போன பகுதியில் சொல்லியபடி எழுதி பார்த்து வந்ததன் விளைவு ,நான் எவ்வளவு அதிகமாக சாப்பிடுகிறேன் என்று தெரியவந்தது...
முதலில் உணவு எடுத்துக்கொள்ளும் முறையை ஒழுங்குபடுத்தினேன்.வயிறு முட்ட சாப்பிடுவதை நிறுத்தினேன்.முக்கால் வயிறு நிரம்ப சாப்பிட்டால் போதுமானது.கொஞ்ச நாளைக்கு தேநீர் குடிப்பதை சற்று அதிகபடுத்தி கொண்டேன்.சற்றுபசிப்பது போல் இருந்தால் 2 மேரி ரொட்டி துண்டுகளை சாப்பிட்டு பழகினேன். சற்று பசிப்பது குறைந்தது .இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ,நாம் பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்க கூடாது ,ஏதாவது ஒரு உணவை எடுத்துகொள்ள வேண்டும்.குறைவாக எடுத்துக்கொள்ளவும்.
இயற்கையாகவே கடவுள் நமக்கு உடம்பில் நமக்கு பல அற்புதங்களை கொடுத்துள்ளார்.நீங்கள் தினமும் காலை எழுந்திருக்கும் நேரத்தை மாற்றி 2 ,3 நாள் அலாரம் வைத்து எழுந்து பழகுங்கள் ..4 வது நாள் அலாரம் இல்லாமலே எழுந்து விடுவீர்கள் .அதிப்போலதான் உணவு உண்ணுவதும்.சுமார் 15
நாட்களில் பழகி விட்டது .
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால்.நாம் எடுத்துக்கொள்ளும் உணவு குறைந்த கலோரி உள்ள உணவாக இருக்க வேண்டும்.சரி.. ஒவ்வொரு உணவுக்கும் கலோரி கண்டு பிடிப்பது எப்படி என்பதையும் ,எது கலோரி அதிகம் உள்ள உணவு,குறைவாக உள்ள உணவு என்பதையும் ,அதோடு "நெகடிவ் கலோரி Food ",நல்ல ,கெட்ட கொழுப்பு பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக பழங்கள் /காய்கறிகள் இவையெல்லாம் குறைந்த கலோரி உள்ள நல்ல உணவுகள்..நீங்கள் அதில் மசாலா/எண்ணெய் சேர்க்கும் போதுதான் அதன் குணம் /தன்மை மாறி அதன் கலோரி அளவுகள் மாறுகிறது.நீங்கள் பழங்களை நறுக்கி அதில் தேன்,மிளகு பொடி சேர்த்து சாப்பிடலாம் .காய்கறிகளில் குறைந்த காரம் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
தொடரும்.....
நம்ம ஊரு சாப்பாட்டுல மசாலா,எண்ணெய்,புளி எல்லாம் நிறைய இருக்கும்.இது செரிக்காமதான் நமக்கு தொப்பை விழுது.சரிதானே பாலாஜி.?
பதிலளிநீக்குsarithaan ...But Naama ippa pazhaya mathiri velai seivathu illa mani...Athaan
பதிலளிநீக்குதொடர்ந்து எழுது பாலாஜி..ஓட்டுப் பட்டை,திரட்டியை பயன் படுத்து.நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள்.
பதிலளிநீக்கு