பகுதி 1
நான் மருத்துவன் இல்லை ..எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான்
இன்றைய வேகமான உலகில் நாம் யாரும் நம் உடலை சரியாக கவனிப்பது இல்லை ..மங்காத்தா படத்தில் வருமே "Money Money .." என்று அதைதான் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.
நான் கடந்த 2010 ஆம் ஆண்டு சுமார் 90 கிலோ எடையிருந்தேன்...உடல் எடையை எப்படியாவது குறைத்தே ஆகவேண்டும் என்னும் எண்ணத்தில் தனியார் உடற்பயிர்ச்சி கூடத்தை அணுகினேன் .
அவர்கள் என்னை முதலில் அவர்களது மருத்துவரை பார்க்க வேண்டும் என்றார்கள் .அதன்படி அவரை சந்தித்தேன்.கூடவே பயிற்சியாளரும் இருந்தார்.அவர் என் உடலின் எடை ,உயரம் ,இடுப்பு சுற்றளவு ,மார்பு சுற்றளவு ,அனைத்தையும் குறித்துக்கொண்டார்.பின்னர் அவர் என்னிடம், எனது எடை 68 கிலோ தன இருக்க வேண்டும் என்றும் நான் 22 கிலோ அதிகமாக இருப்பதாக கூறினார் .
அதை குறைக்க சுமார் 3 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லி, முதல் வருடத்திற்கு ரூ . 46 ,௦௦௦/-ம், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு ,வருடத்திற்கு ரூ.28,௦௦௦/-ம் செலவாகும் என்றார் .எனக்கு தூக்கி வாரிப்போட்டது.
என்ன செய்வது ..உடனே உதவிக்கு வந்தார் கூகுள் ஆண்டவர் .தேடினேன்.. தேடினேன்..உடல் எடை குறைப்பதற்கான அனைத்து விவரங்களையும் சேகரித்தேன் .
அப்போதுதான் என் சின்ன வயதில் எனது பெற்றோர் எனக்கு சொல்லிய விடயங்கள் ஞாபகத்துக்கு வந்தது..எனது அம்மா ஒவ்வொரு முறை உணவு பரிமாறும் போதும்,அந்த உணவில் உள்ள சத்துக்களை சொல்வார்.
பயனுள்ள தொடர் பாலாஜி.இப்பத்தான் படிச்சுட்டு வாறேன்.தொடர்ந்து எழுது.தியாகேசர் போட்டோ சூப்பர்.
பதிலளிநீக்கு