செவ்வாய், 17 ஏப்ரல், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 6

பகுதி 6:-

சித்திரை திருநாளுக்காக ஊருக்கு சென்றிருந்ததால் தொடர் சற்று தாமதமாக வருகிறது.

நான் பகுதி - 4 ல் சொல்லியபடி முதலில் நாம் உண்ணும் உணவில் உள்ள கலோரிகளின் அளவை பார்த்தோம்.அடுத்து ஒத்துக்கொள்ளும் ,ஒத்துக்கொள்ளாத உணவு பற்றி பார்ப்போம்.

ஒவ்வொருவருக்கும் முன்பு சொன்னது போல் அவரவர் உடல் அமைப்பு மாறுபட்டு இருக்கும்.அதனால் ஒருவருக்கு காரம் அதிகம் பிடிக்கும் ,சிலருக்கு இனிப்பு அதிகம் பிடிக்கும்.அவ்வாறு பிடித்த உணவை நாம் சாப்பிடும் போது அது செரிமானம் ஆக வேண்டுமே ?அது மிக முக்கியம்.

எனக்கு நிலக்கடலை மிகவும் பிடிக்கும் ஆனால் அது எளிதில் எனக்கு செரிமானம் ஆகாது .அது போல சிலருக்கு இனிப்பு இரவில் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும் ,இவை அனைத்துமே உடலால் நமக்கு கொடுக்கப்படும் சமிஞ்ஞைகள்.எனவே நாமே நமக்கு ஒத்துவராத உணவுகளை தவிர்த்து அல்லது என்றாவது ஒருநாள் மட்டும் சாப்பிட்டு பழகுவது நல்லது.

ஆதலால் இதை தவிர்ப்பதன் மூலம் நாம் நம் உடலுக்கு வேலை பளுவை குறைக்கிறோம் .கீரை ,தயிர் ,வெங்காயம் (பச்சையாக) ஆகியவற்றை இரவில் எடுத்துக்கொள்ள கூடாது .இவை அனைத்தும் செரிப்பதற்கு மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளும்.இரவு உணவை முடிந்த மட்டும் சீக்கிரம் எடுத்துக்கொள்வது நல்லது ,ஏனெனில் நாம் சாப்பிட்ட உடன் நமது உணவு செரிக்க சுமார் இரண்டரை மணி நேரம் ஆகும்.நாம் சாப்பிட்ட உடன் உறங்க சென்று விட்டால் ,நாம் சாப்பிட்ட உணவு அனைத்தும் கொழுப்பாக மாறி உடலில் சேரும். இரவு உணவிற்கும் ,படுக்கைக்கு செல்லுவதற்கும் குறைந்தது இரண்டு மணி நேரம் இடைவெளி கண்டிப்பாக தேவை.இதை நீங்களே ஒரு சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம் .

:::சூடான இட்லி::: 
வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் காலை எழுந்திருக்கும் போது நீங்கள் உடல் அலுப்பு /வலி யை உணருவீர்கள். ஒரு நாள் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரம் கழித்து படுத்து,அடுத்த நாள் காலை பாருங்கள் !கண்டிப்பாக உடல் வலி இருக்காது .இரவு உணவு உண்ணும் காலம் தவறும்போது, பழம் ,பால் ஆகியவற்றை உண்ணுவது உகந்தது .பழங்களின் செரிமான நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே .

நாம் இரவு உணவாக இட்லி ,இடியாப்பம் மற்றும் வேக வைத்த உணவுகளான அரிசி உப்மா,நீர்க்கொழுக்கட்டை,பழ கலவை (Fruit Salad ) போன்றவற்றை அருந்துவது நல்லது.

அடுத்து நெகடிவ் கலோரி food .அது என்னங்க நெகடிவ் கலோரி ?
எந்த ஒரு உணவு தான் கொடுக்கும் கலோரிகளை விட ,அதிகமான கலோரிகளை எடுத்துக்கொண்டு செரிக்கிறதோ அதுதான் நெகடிவ் கலோரி உணவாகும்.
சில நெகடிவ் கலோரி உணவு வகைகள் .....
                                                             

    1.       Celery
    2.       Oranges
    3.       Strawberries
    4.       Tangerines
    5.       Grapefruit
    6.       Carrots
    7.       Apricots
    8.       Lettuce
    9.       Tomatoes
    10.   Cucumbers
    11.   Watermelon
    12.   Cauliflower
    13.   Apples
    14.   Hot Chili Peppers
    15.   Zucchini  

    தொடரும்....

  


4 கருத்துகள்:

  1. \கீரை ,தயிர் ,வெங்காயம் (பச்சையாக) ஆகியவற்றை இரவில் எடுத்துக்கொள்ள கூடாது .இவை அனைத்தும் செரிப்பதற்கு மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளும்.\

    இது கரக்ட் பாலாஜி.கீரை இரவில் சாப்பிடக் கூடாதுன்னு சபீபத்தில் ஒரு டாக்டர் சொல்லிக்கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. நான் யோகா கிளாஸ் போனப்போ நெகடிவ் புட் ,பாசிடிவ் புட் னு ஒரு லிஸ்ட் சொன்னாங்க .அது என்னான்னு எழுது பாலாஜி.

    பதிலளிநீக்கு

::: வணக்கம் :::

உங்கள் வருகைக்கு நன்றி !!!

ஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.

அன்புடன்

ஆரூரான்