செவ்வாய், 10 ஏப்ரல், 2012

உணவே மருந்து !!! நீங்களே மருத்துவர் !!! பகுதி 5

பகுதி 5:-

புகைப்படத்தை பார்த்தவுடன் நல்ல பசியுடன் இருப்பவர்களுக்கு ஒரு கட்டு கட்டலாம் என்று தோணும் .நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் உணவு வகைகளை நமக்கு சொல்லி தந்துள்ளார்கள் பாருங்கள்.

சரி விடயத்திற்கு வருகிறேன்.அரிசியை பொறுத்த வரை நாம் சமைத்த பின் உள்ள அளவையே அதாவது எடையை வைத்தே கணக்கிடுவது நல்லது .

அரிசியானது அதன் தரத்தின்படி கலோரிகள் மாறிவரும்.அதாவது வெள்ளை அரிசிக்கும் ,சிகப்பு அரிசிக்கும் கலோரிகள் மாறும்.

ஒரு கிராம் சமைத்த வெள்ளை அரிசியில்1 .3 கிராம் கலோரிகள் உள்ளது.நாம் 500 கிராம் எடையுள்ள சமைத்த அரிசியை உண்டால் 650 கலோரிகள் அதிலிருந்து கிடைக்கும் அதில் 45 சதவிகிதம் மாவுச்சத்து உள்ளது.  



மேலும் சமைத்த அரிசியில் அதாவது சோற்றில் ,நாம் மேலும் ஏதாவது சேர்த்தால் அதன் கலோரிகள் ஏறிக்கொண்டே போகும்.(அதாங்க கலந்த சாதம்னு சொல்லப்படும் தேங்காய் சாதம் ,தக்காளி சாதம் ....)

இதே போல் ஒவ்வொரு உணவிற்கும் அடிப்படை கலோரிகள் உண்டு அதனுடன் நாம் சேர்க்கும் பொருளுக்கு தக்க அதன் கலோரிகள் மாறும் .சில நாட்கள் நீங்கள் கணக்கிட்டு வந்தாலே தெரிந்து விடும்.

நாம் தினமும் உண்ணும் சில உணவிற்கு கலோரிகள் கீழே கொடுத்துள்ளேன் .மேலும் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும் .

தேநீர் - (100 மி.லி)-75கலோரிகள்
(50 மி.லி பால் ,20 கி சர்க்கரை,தேயிலை ,தண்ணீர் )
குளம்பி - (100 மி .லி )-120 கலோரிகள்
இட்லி ஒன்றுக்கு (மீடியம் சைஸ்)-75 கலோரிகள் .
தோசை ஒன்றுக்கு(மீடியம் சைஸ்)-150 கலோரிகள்.  
(எண்ணெய் குறைவாக )
ஒரு தேக்கரண்டி ந .எண்ணெய் - 35 கலோரிகள்.
பொடி ஒரு தேக்கரண்டி-70 கலோரிகள்.
சப்பாத்தி ஒன்று(மீடியம் சைஸ்)-75 கலோரிகள் .
(புல்கா )
ரவை உப்மா 1 கப் - 300 கலோரிகள்
நெய் பொங்கல் 1 கப்-350 கலோரிகள்
தேங்காய் சட்னி 1 கரண்டி - 150 கலோரிகள்
சாம்பார் 1 கப் - 150 கலோரிகள்

இனிப்பு வகையறாக்களுக்கு கலோரிகள் மிக அதிகம் அதனால் கொஞ்சம் பார்த்து எடுத்துக்கொள்வது நல்லது.
    
இதையெல்லாம் நான் எழதுவது உங்களை பயமுறுத்த அல்ல.நாம் எடுத்துக்கொள்ளும் உணவே நம்மை நோய்க்கு தள்ளாமல் இருக்கவே ... 
இந்த வேகமான உலகில்,கண்டிப்பாக நம் உடலை நாம் பேணி பாதுகாத்து கொள்ள வேண்டும்.உடல் நன்றாக இருக்கும் வரைதான் நம்மால் உழைக்க முடியும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
என்னங்க ..நான் வெஜ் அயிட்டம் பற்றி ஒன்றும் போடலையே ?... என்று கேட்பது புரிகிறது ...

முடிந்த அளவு நான் வெஜ் எனப்படும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது .அது நம் உடலுக்கு கொடுக்கும் வேலை என்பது மிக அதிகம் அது மட்டும் அல்லாமல் அதிக சத்துக்களை உள்ளடக்கியது .15 நாட்களுக்கு ஒரு முறை என்பது போதுமானது.  


தொடரும்...


4 கருத்துகள்:

  1. //முடிந்த அளவு நான் வெஜ் எனப்படும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது//

    ஆகா...இது இல்லனா எனக்கு சாப்பாடே உள்ள இறங்காதே.தொடர்அருமையா போய்கிட்டு இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. பாலாஜி.. பதிவுகள தமிழ் மணத்தில இணைச்சி விடு.அதிலிருந்துதான் நிறைய பேர் வந்து படிப்பாங்க.எங்கே .'.பாலோயர் வெட்ஜெட் காணோம் ?.

    பதிலளிநீக்கு
  3. பாலாஜி..இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி மணி.சித்திரை திருநாளுக்கு ஊருக்கு போயிருந்தேன்.
    தமிழ் மணத்தில் இணைப்பது சற்று கடினமா இருக்கும் போல.கொஞ்சம் ஹெல்ப் தேவை மணி.
    அண்ணன் பாண்டி யில செட்டிலாயிட்டார் போல.5 நாட்களுக்கு முன்பு பேசினேன் மணி.

    பதிலளிநீக்கு

::: வணக்கம் :::

உங்கள் வருகைக்கு நன்றி !!!

ஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.

அன்புடன்

ஆரூரான்