பகுதி 8:-
இப்போது முக்கியமான பகுதிக்கு வந்துவிட்டோம்.இப்போது எடையை குறைக்க கூடிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.
நீங்கள் தொடர்ந்து சாப்பிடும் உணவுகளை பதிவுசெய்வது ஒருபுறம் நடக்க,அடுத்து உடல் எடையை குறைக்க எடுக்க வேண்டியது என்ன என்று பார்ப்போம்.
1.உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்.
2.எளிமையான உடற்பயிர்ச்சி.
3.குறைவான கலோரி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்.
இதில் 3வது தலைப்பை பற்றி விரிவாக பார்த்துள்ளோம்.மீதி இரண்டையும் பார்ப்போம்.
நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் "பெட் காஃபி" குடிக்கும் பழக்கம் இருக்கும்.பழக்கம் இருப்பவர்கள் தயவுசெய்து விட்டு விடவும்.அது நம் உடம்பை பாழாக்கும்.காலையில் எழுந்து பல் துலக்கியவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.
அவ்வாறு செய்வதால் நம் குடலில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை சுத்தபடுத்துவதுடன்,உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
மேலும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீரில் அரை மூடி எலும்பிச்சை பழம் சாறு சேர்த்து அத்துடன் 2 சி.தேக்கரண்டி தேன் கலந்து தொடர்ந்து பருகி வந்தால் அது நமது எடையை குறைக்க உதவும். மேலும் இவை செரிமான சக்திக்கும்,உடலுக்கு புத்துணர்ச்சியையும் தரும்.
கொள்ளு:-
அடுத்து நாம் காலையில் எடுத்துக்கொள்ளும் சிற்றுண்டிக்கு தொட்டுக்கொள்ள சட்னிக்கு தேங்காய்க்கு பதிலாக,தக்காளி,கேரட்,
கத்திரிக்காய்,வெங்காயம்,பூண்டு ,ஆகியவற்றைபயன்படுத்துங்கள்.
பொடியில் பருப்புடன் கொள்ளை சேர்த்து அரைத்து பொடி தயார் செய்து பயன்படுத்துங்கள்.கொள்ளு உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைக்கும். கொள்ளு துவையலும் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.கொள்ளு முதலில் சாப்பிடுபவர்கள் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு பிறகு பயன்படுத்தவும். ஏனென்றால் கொள்ளு சற்றே சூட்டை அதிகப்படுத்தும்.
மேலும் வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றிவிடும்.
கொள்ளை ,ஊறவைத்து சுண்டல்,குழம்பு,ரசம் ஆகியவற்றை செய்யலாம்.
வாரத்திற்க்கு 2 அ 3 முறை சேர்த்துக்கொள்வது போதுமானது.தேவையற்ற கொழுப்பை குறைப்பதில் கொள்ளுவிற்க்கு நிகர் வேறெதுவுமில்லை.
கத்திரிக்காய்:-
என்னங்க கத்திரிக்காய போய் உடல் எடையை குறைக்கும்னு எழுதுறீங்க என்று நீங்கள் நிறைய பேர் நினைக்கலாம்.ஆனால் கத்திரிக்காயை (குறைந்த எண்ணெய்,மசாலா சேர்த்து) சமைத்து தொடர்ந்து சாப்பிட்டால் அது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்.
கொய்யாபழம்:-
கொய்யாவிற்க்கும் இதே குணம் உண்டு. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும்.
Balaji..I have connected your post to thamilmanam.Now your post under 'HOT POST'.What hppnd to flwr wedget.keep on psting....
பதிலளிநீக்கு