பகுதி 9:-
அடுத்து ???
>>>>பூண்டு<<<
இரண்டு விதமான பூண்டுகள் சந்தையில் கிடைக்கும்.ஒன்று நாட்டுப்பூண்டு,மற்றொன்று மலைப்பூண்டு.முதலாவது அளவில் சிறுத்தும், மலைப்பூண்டு சற்று பெரிதாகவும் இருக்கும். நம் நாட்டுப்பூண்டிற்க்கு வீரியம் சற்று அதிகம்.அதனால் வ்றுவிறுப்பும் காரமும் சற்று கூடுதலாக இருக்கும்.முடிந்த அளவு நாட்டுபூண்டை பயன்படுத்துங்கள்.
பூண்டானது முதலில் உடலில்
அடுத்து ???
>>>>பூண்டு<<<
மலைப்பூண்டு |
நாட்டுப்பூண்டு |
உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், கொலஸ்ட்ரால்மற்றும் கொழுப்பைகுறைக்க உதவுகிறது.
மேலும் இருதய நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
பொதுவாக நம் மக்கள் பூண்டை பயன்படுத்துவது உண்டு.ஆனால் வாய் நாற்றம் வரும் என்று இந்த தலைமுறையினர் ஒதுக்குகின்றனர்.
பூண்டை நாம் பலவிதமாக பயன்படுத்தலாம்.
வத்தகொழம்பு,ரசம்,பூண்டு சட்னி என்பது அனைவரும் பயன்படுத்துவது தெரிந்ததே.வேறு சில வகைகளிலும் பூண்டை பயன்படுத்தலாம்.
பூண்டை உரித்து அதை மிக சிறிய துன்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
நீங்கள் இட்லி தட்டில் ஊற்றிய பிறகு,அதன் மீது தூவி பிறகு ஆவியில் வைக்க வேண்டும்.இட்லியுடன் பூண்டும் சேர்ந்து ஆவியில் வெந்திருக்கும்.பிறகு வழக்கம் போல சட்னி சாம்பாருடன் தொட்டு சாப்பிடலாம்.இதே மாதிரி தோசையின் மீது தூவியும்(பொடி தோசைக்கு பொடி தூவுவது போல்)பயன்படுத்தலாம்.
இரவு படுப்பதற்க்கு முன் நிறைய பேருக்கு பால் அருந்தும் வழக்கம் இருக்கும்
ஒரு டம்ளர் பாலுடன் இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து, பூண்டை அதனுடன் சேர்த்து கொதிக்க விடவேண்டும் பால் சுண்டி மீண்டும் 1 டம்ளர் ஆக வரும் வரை காத்திருந்து பிறகு வடிகட்டி அருந்தலாம்.இதுவும் உடலுக்கு மிக நல்லது.பெண்கள் இதை செய்து பயன்படுத்திவிட்டு சொல்லவும்.
சின்ன வெங்காயம் (அ) சாம்பார் வெங்காயம்
இதுவும் ஒரு அற்புத மருந்து.உடலில் ரத்தத்தை சுத்திகரித்து சிறுநீர் மூலம் கழிவை வெளியேற்றும் தன்மையை கொண்டது.கொலஸ்ட்ரால்
மற்றும் கொழுப்பைகுறைக்க உதவுகிறது.
இதை நாம் சாம்பார்,சட்னி ஆகியவற்றிற்க்கு பயன்படுத்துவது போல பல வகைகளில் பயன்படுத்தலாம்.சிறிது சிறிதாக நறுக்கி வதக்கிவிட்டு தேங்காய் சட்னி வகைகளுடன் சேர்க்கலாம்.
தோசை மீது தூவி வார்க்கலாம்.வாய் நாற்றம் எடுக்கும் என நினைப்பவர்கள் விடுமுறை தினங்களில் பயன்படுத்துங்கள்.மேலும் பச்சையாக சாம்பார் சாதம் மற்றும் பழையது எனப்படும் பழைய சோறுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
::: வணக்கம் :::
உங்கள் வருகைக்கு நன்றி !!!
ஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.
அன்புடன்
ஆரூரான்