பகுதி 1
சில ஆண்டுகளுக்கு முன் என் தொழில் நிமித்தமாக, நமது தமிழ் இயக்குனர்,நடிகர்,நடிகைகளுடன் பழகுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அவர்களுடன் நெருங்கி பழகியபோதுதான் அவர்களின் நிஜ முகங்களை காண முடிந்தது.அந்த அனுபத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் அப்போது ஒரு பிரபலமான வணிக நிறுவனத்தில் விற்பனை மேலாளலராக பணியாற்றி வந்தேன்.அது பிரபலமான சிமெண்ட் நிறுவனத்தின் ஒரு பிரிவாகும்.அந்நிறுவனம் அந்நிய செலவாணி வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளது.
அப்போது நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக வெளிநாடுகளில்(லண்டன்,துபாய்) கலை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்து சுமார் 330 பேர் பயணம் செய்ய திட்டமிட்டனர்.இதற்கான பயண் ஏற்பாட்டை நடன இயக்குனர் நடத்தும் டிராவல்ஸ் நிறுவனம் செய்தது.
சுமார் ஆறு கோடி ரூபாய் வர்த்தகம் உள்ள அந்த பிசினஸ்ஸை எடுக்க, நான் எப்படியாவது ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள பெரு முயற்சி எடுத்து வந்தேன்.ஒரு வழியாக பலமுறை அலைந்து நடிகர் சங்க பி.ஆர்.ஒ க்கள் அறிமுகமானார்கள்.
அதில் எனக்கு மிகவும் உதவியவர் சமத்துவ தலைவரின் நண்பரும்,அவரின் பி.ஏ வும்,அவருடன் ஒன்றாக ஒரே பத்திரிக்கையில் வேலை செய்தவரும் ஆகும்.(இன்னும் நட்பு தொடர்வதால் பெயரை குறிப்பிடுவது ஆரோக்கியமல்ல)
ஒரு வழியாக பேசி கணிசமான பிஸினஸை தர சம்மதித்தார்கள்.பிஸினஸ் அக்ரிமெண்டெல்லாம் ஒன்னும் கிடையாது. பொதுவாக சினிமா உலகத்தினர் இதே போன்ற விடயங்களுக்கு வெளி ஆட்களுடன் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்வதில்லை,பி.ஆர்.ஒ சொல்படிநடப்பார்கள்.
அது மட்டுமல்லாது, பி.ஆர்.ஒ க்களும் அவர்களுக்கு நம்பிக்கையாக
நடந்துகொள்வார்கள்.
அதன் படி பயணம் செய்யும் அனைத்து இயக்குனர்,நடிகர்,நடிகைகளின் பர்சனல்,ஆபீஸ் நம்பர்கள் அடங்கிய லிஸ்ட் கொடுத்தார்கள்.மேலும் சில நடிகர்களின் பேரைச்சொல்லி நேரம் பார்த்து பேசவும் சொன்னார்கள். அந்த லிஸ்ட்டை நம்பிக்கையாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தினார்கள்.
லிஸ்டை யாரிடமும் கொடுக்காதே என்று எனது மேலதிகாரி என்னிடம் கூறிவிட்டு அவர் இரண்டொரு நம்பர்களை பெற்றுக்கொண்டார்.
நான் லிஸ்டை வரிசைப்படுத்தி வைத்துகொண்டு,முதலில் போன் பேசலாம் என்று தேர்வு செய்தது யார் பெயரைத்தெரியுமா ?
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
::: வணக்கம் :::
உங்கள் வருகைக்கு நன்றி !!!
ஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.
அன்புடன்
ஆரூரான்